சென்னை: தமிழ்நாட்டில் 4நாட்கள் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக தமிழ்நாடு  வெதர்மேன் பிரதீப் ஜான் தெரிவித்து உள்ளார்.

தமிழ்நாட்டில் அடுத்த 4 நாட்களில் 12 மாவட்டங்களில் நல்ல மழை பெய்யும் என தனது தனியார் வானிலை ஆர்வலரான பிரதீப்ஜான் முகநூல் பக்கத்தில்  பதிவிட்டு உள்ளார். தமிழகம் முழுவதும் கடந்த சில நாட்களாக வெயில் கொளுத்தி வரும் நிலையில் சில மாவட்டங்களில் 100 டிகிரி செல்சியஸை தாண்டி வெப்பம் பதிவாகி  உள்ளது. இந்த நிலையில்,   வளிமண்டல கீழ் அடுக்கு காற்றின் திசை மாறுபாடு காரணமாக தமிழகம் புதுவை காரைக்கால் பகுதியில் இன்று இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யும் என்று  இந்திய வானிலை மையம் அறிவித்துள்ளது.

அதன்படி,  ஏப்ரல் 14 முதல் 16 வரை தமிழகத்தின் சில இடங்களிலும் புதுவை மற்றும் காரைக்காலில் ஏப்ரல் 17 ஆகிய தேதிகளில் மழை பெய்யும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மொத்தத்தில் இன்று முதல் அடுத்த ஐந்து தினங்கள் தமிழகம் முழுவதும் மிதமான மழை பெய்யும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக தென் தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும் வட தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் இன்று லேசானது முதல் மிதமான மழை பெய்யும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது

மேலும் அடுத்த ஒரு மணி நேரத்தில் நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், மயிலாடுதுறை, ராமநாதபுரம், திருநெல்வேலி, கன்னியாகுமரி ஆகிய ஏழு மாவட்டங்களில் மிதமான மழை பெய்யும் என மஞ்சள் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில், வானிலை ஆய்வு மையத்தின் தகவலை உறுதிபடுத்தும் வகையில், வெதர்மேன் பிரதீப் ஜானும் தெரிவித்து உள்ளார். அடுத்த 4 நாட்களில் தமிழ்நாட்டில் 12 மாவட்டங்களில் நல்ல மழை பெய்யும் என்று    தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர்  தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள தகவலில்,  தமிழ்நாட்டில் அடுத்த 4 நாட்களில் 12 மாவட்டங்களில் மழை பெய்யும். தூத்துக்குடி, நெல்லை, ராமநாதபுரம், கன்னியாகுமரி, தென்காசி, விருதுநகரில் அடுத்த 4 நாட்களில் நல்ல மழைக்கு வாய்ப்பு உள்ளது. தேனி, கொடைக்கானல், நீலகிரி, மதுரை, சிவகங்கை, புதுக்கோட்டையில் அடுத்த 4 நாட்களில் நல்ல மழை பெய்யும்.

ஏப்ரல் 15-ம் தேதிக்குப் பிறகு டெல்டா மாவட்டங்களிலும், தென் மாவட்டங்களிலும் மழைக்கு வாய்ப்பு உள்ளது. தஞ்சை, திருவாரூர், நாகை, திருச்சி உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் நல்ல மழைக்கு வாய்ப்பு உள்ளது. சென்னையில் வெப்பநிலை குறைந்து வறண்ட வானிலையே நிலவும். சென்னையில் ஏப்ரல் மாதத்தில் மழைக்கு வாய்ப்பில்லை என்றும்  தெரிவித்துள்ளார்.

அதுபோல முகநூல் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,

ஏப்ரல் முதல் பாதி வறண்ட வெப்ப மழைக்கு பிறகு தமிழகம், கேரளா, கர்நாடகாவுக்கு நல்ல செய்தி
—————-
டெல்டா, தென் தமிழகம், மேற்கு தமிழகம், கேரளா, கடற்கரை மற்றும் உட்புற கர்நாடகா, உள்புற தமிழகத்தின் பகுதிகளுக்கு நல்ல செய்தி. நீடித்த ட்ரோ மற்றும் ஈஸ்டர்லிகளுக்கு நன்றி, அடுத்த 4-5 நாட்களில் நல்ல மழை பெய்யும்.
சென்னை வறண்டுதான் இருக்கும் ஆனால் ஈஸ்டர்லிகளுக்கு நன்றி வெப்பம் செக் ஆகும்.
பெங்களூரு 1 அல்லது 2 நாட்களுக்கு ஹிட் அல்லது மிஸ் மழை பெய்யும்
அடுத்த 4-5 நாட்களில் நல்ல மழை பெய்ய ஹாட்ஸ்பாட்ஸ் – தூத்துக்குடி, ராமநாதபுரம், நெல்லை, கன்னியாகுமரி, தென்காசி, விருதுநகர், தேனி, கொடைக்கானல், வால்பாறை, நீலகிரி, மதுரை, சிவகங்கை, புதுக்கோட்டை ஆகிய இடங்களில் மிக நேர்த்தியாக வைக்கப்பட்டுள்ளது.
என தெரிவித்துள்ளார்.