சென்னை:   சென்னையில் இன்று முதல்  4நாட்கள் கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது. இதை எதிர்கொள்ள தமிழ்நாடு அரசு தேவையான முன்னேற்பாடுகளை செய்து வருகிறது.
இந்த நிலையில், சென்னை வெள்ளம் குறித்து அரசுக்கு அறப்போர் இயக்கம் ஏற்கனவே சமர்ப்பித்த கள ஆய்வறிக்கையை நினைவுபடுத்தி உள்ளது.
இதுகுறித்து அறப்போர் இயக்கம் தனது முகநூல் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது,
மெட்ரோ ரயில் திட்ட குழிகள்.
மெட்ரோ வாட்டர் குடிநீர் கழிவுநீர் குழிகள்.
சாலையில் மேலும் கீழுமாக இருக்கும் கழிவுநீர் மற்றும் மழைநீர் கால்வாய் மூடிகள்.
சாலை குழிகள்.
தூர் வாரப்படாத நீர்வழி பாதைகள் மற்றும் ஏரிகள்.
ஒன்றோடு ஒன்று இணைக்கப்படாத மழை நீர் கால்வாய்கள்.
இத்தனையையும் தாண்டி சென்னை மக்களை மழையில் இருந்து காப்பாற்ற போட் மற்றும் பம்ப் செட்டுகளுடன் தயாராக இருப்பதாக சொல்லும் சென்னை மாநகராட்சிக்கு
வாழ்த்துக்கள்
என தெரிவிக்கப்பட்டுள்ளதுடன்,  சென்னையில் ஏற்படும் வெள்ளத்திற்கான காரணங்கள் மற்றும் தீர்வுகள் குறித்து அறப்போர் அரசுக்கு சமர்ப்பித்த கள ஆய்வறிக்கையையும் இணைத்துள்ளது.
முழு விவரம் அறிய கீழே உள்ள பிடிஎஃப் பைலை டவுன்லோடு செய்யவும்…