மத்திய பிரதேசம்:
இளம்பெண்ணை கடத்தி பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் தலைமையாசிரியர் உட்பட 4 பேரை போலீசார் கைது செய்தனர். இவ்வழக்கில்தொய பாஜக நிர்வாகி கட்சியில் இருந்து நீக்கப்பட்டார்.
மத்திய பிரதேசத்தின் ஷாதோல் மாவட்டத்தைச் சேர்ந்த 20 வயது இளம் பெண் ஒருவர் மாயமான நிலையில் இது தொடர்பாக அவரின் பெற்றோர் ஜெய்த்பூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். ஆனால் புகார் அளித்த மறுநாளான சனிக்கிழமையன்று (பிப் 20) மாலை அவர் வீடு திரும்பினார். வீடு திரும்பிய அப்பெண் கடும் அதிர்ச்சியில் இருந்ததால் யாரிடமும் பேசாமல் இருந்து வந்தார். அதன் பின்னர் காவல்துறையினர் வந்து விசாரணைக்காக அழைத்துச் சென்ற போது தான் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியானது.
அப்பெண்ணுக்கு ஏற்கனவே அறிமுகமான பள்ளி தலைமையாசிரியர் ராஜேஸ் சுக்லா மற்றும் 3 பேர் சேர்ந்து தன்னை காரில் கடத்திச் சென்று அருகில் உள்ள கிராமம் ஒன்றில் உள்ள பண்ைண வீட்டில் அடைத்து வைத்ததாக கூறினார். அங்கு அவருக்கு கட்டாயப்படுத்தி வாயில் மது ஊற்றி பள்ளி தலைமையாசிரியர் ராஜேஸ் சுக்லா மற்றும் அவரின் நண்பர்கள் 3 பேர் இணைந்து அவரை கூட்டு பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். இதன் பின்னர் அவர்கள் காரில் அப்பெண்ணை அவரின் வீட்டு வாசலில் இறக்கி விட்டு சென்றுள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பாக அப்பெண் ஜெய்த்பூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அவர்களில் தலைமையாசிரியர் ராஜேஸ் சுக்லா, விஜய் திரிபாதி உள்ளிட்ட 4 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். குற்றம் சாட்டப்பட்ட நான்கு பேருக்கும் எதிராக பாலியல் பலாத்கார வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக ஷாதோல் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு (ஏஎஸ்பி) முகேஷ் வைஷ்ய தெரிவித்தார்.இதில், ஜெய்த்பூர் மண்டல பாஜக தலைவர் விஜய் திரிபாதியை, பாலியல் ஒழுங்கீனமான நடவடிக்கையில் ஈடுபட்டதாக கூறி, அக்கட்சியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார்