ந்தோனேஷியாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தை தொடர்ந்து, இந்தியாவுக்கு சொந்தமான  நிகோபர் தீவுகளில் இன்று அதிகாலையில் நிலஅதிர்வு  ஏற்பட்டது.  ரிக்டர் அளவுகோலில் 4.7 ஆக பதிவாகி உள்ளது.

நிகோபார் தீவுகளில் இன்று அதிகாலை 4.44 மணியளவில் லேசான நிலநடுக்கம் உணரப்பட்டது. நிலநடுக்கத்தால், அங்குள்ள கட்டிடங்கள் அதிர்ந்ததாகவும், உடனே மக்கள் வீட்டில் இருந்த வெளியேறியதாகவும் கூறி உள்ளனர்.

இந்த   நிலநடுக்கத்தால் பொருட்சேதமோ, உயிர்ச்சேதமோ ஏற்பட்டதாக தகவல் வெளியாக வில்லை.

இன்று அதிகாரி  இந்தோனேஷியாவில் உள்ள சுலவேசி தீவின் கிழக்கு கடற்கரையில் இருந்து 17 கிலோ மீட்டர் தொலைவில் 6.8 ரிக்டர் அளவில் பயங்கர த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இதனால் இந்தோனேஷியாவின் மொரோவலி மாவட்டத்தில் உள்ள கடலோர பகுதிகளுக்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டு பின்னர் வாபஸ் பெற்றப்பட்டது. இதன் தாக்கம் உலகின் பல இடங்களில் எதிரொலித்தது.

இந்தியாவின் நிகோபார் தீவு, பாபுகினியா தீவில் 5.9 ரிக்டர்அளவு கோலிலும், சமோயா தீவில் 5.8 ரிக்டரிலும், அமெரிக்காவின் பிவர்லி மலை பகுதியில் 2.9 அளவிலும் நிலநடுங்கள் ஏற்பட்டன.

நிலநடுகத்தால் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்த எந்த தகவலும் இல்லை.