டெஹ்ரான்:

ரான் நாட்டின் தலைநகரான டெஹ்ரானில் நேற்று திடீரென 4.2 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது.

டெஹ்ரானில் இருந்து மேற்கு திசையில் சுமார் 51 கி.மீ தொலைவில் இந்த நில அதிர்வு ஏற்பட்டது.  இந்த நிலநடுக்கத்தினால் வீடுகள் குலுங்கின. இதனால் அச்சமடைந்த மக்கள் வீடுகளை விட்டு வெளியேறி சாலைகளில் தஞ்சமடைந்தனர்.

இந்த திடீர் நிலநடுக்கத்தால் ஏற்பட்ட அதிர்ச்சியில் மாரடைப்பு ஏற்பட்டு ஒருவர் பரிதாபமாக பலியானார். மேலும், கட்டிடங்களிலிருந்து பொதுமக்கள் அவசர அவசரமாக வெளியேற முற்பட்ட வேளையில் ட நெரிசல்  ஏற்பட்டு, அதில் சிக்கி  57 பேருக்கு காயம் ஏற்பட்டது.

தகவலறிந்து உடனடியாக அங்கு சென்ற மீட்பு படையினர் காயமடைந்தவர்களை மீட்டு அருகிலுள்ள மருத்துவமனையில் சேர்த்தனர்.

கடந்த நவம்பர் மாதம் ஈரான் – ஈராக் எல்லைப்பகுதியில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தினால் நூற்றுக்கணக்காணோர் பலியானதோடு, பல்லாயிரக்கணக்காணோர் வீடுகளை இழந்தது குறிப்பிடத்தக்கது.