காஞ்சிபுரம்:
டாடா டெக்னாலஜிஸ் நிறுவனத்துடன் இணைந்து அமைக்கப்பட்டுள்ள தொழில் 4.0 தொழில்நுட்ப மையங்கள் திறக்கப்பட்டது.
ஒரகடம் அரசு தொழிற் பயிற்சி நிலையத்தில் தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தொழில் 4.0 தொழில்நுட்ப மையத்தை தொடக்கி வைத்தார்.
இந்த நிகழ்ச்சியின்போது தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு துறை அமைச்சர் சி.வி. கணேசன், சிறு குறு மற்றும் நடுத்தர தொழில் துறை அமைச்சர் தாமோ அன்பரசன், நாடாளுமன்ற குழு தலைவர் டி.ஆர். பாலு, தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா ஸ்ரீபெரும்புதூர் சட்டமன்ற உறுப்பினர் செல்வ பெருந்தகை, டாட்டா சன் குழுமத்தின் தலைவர் சந்திரசேகரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
தொழில்நுட்ப மையங்களை தொடங்கி வைத்த பின் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், “யார் ஒப்புக் கொண்டாலும், யார் ஒப்புக் கொள்ளாவிட்டாலும், யார் மறைத்தாலும் தமிழ்நாடு என்பது அனைத்து துறைகளிலும் தலை சிறந்த மாநிலமாக, தலைநிமிர்ந்து கம்பீரமாக நின்று கொண்டிருக்கிறது” என தெரிவித்தார்.
தொடர்ந்து ஒரகடத்தில் தொழில் பயிற்சி நிலையங்கள் திறப்பு விழாவில் டாடா குழுமத் தலைவர் சந்திரசேகரன் பேசினார். அப்போது அவர், ”இந்தியாவிலேயே புத்திசாலி மாணவர்கள் தமிழகத்தில் தான் உள்ளனர்” என குறிப்பிட்டார்.