டி.எம்.கிருஷ்ணாவிடம் கற்றுக் கொள்ள எவ்வாறு வந்தீர்கள்?
சீத்தாராம ஆஸ்ரமத்தில் எனது தந்தை கர்நாடகா இசை கற்றார். சர்மாவிடம் கற்பதற்காக 1984&85ம் ஆண்டு எனது தந்தை சென்னை அடிக்கடி வந்தார். 89ம் ஆண்டு பிரான்சுக்க வந்து 3 மாதங்கள் தங்கியிருந்தார். அப்போது எனது குரு டி.எம்.கிருஷ்ணாவும் உடன் வந்தார். எங்களது வீட்டிற்கு வந்து குடும்பத்தோடு பேசி பழகினார். இதன் பிறகு 10 ஆண்டுகள் கழித்து நாங்கள் குடும்பத்தோடு சகோதரர்களின் படிப்புக்காக இந்தியா வந்தோம்.
அப்போது டி.எம்.கிருஷ்ணாவை சந்தித்தோம். இதன் மூலம் தான் இந்தியாவுக்கும், டிஎம் கிருஷ்ணாவுக்கு தொடர்பு ஏற்பட்டது. எனது குடும்பத்தினர் பிரான்சில் உள்ளூர் மாணவர்கள் சிலருக்க அடிப்படை கர்நாடகா இசை வகுப்புகள் நடத்துவார்கள். ஒரு முறை பிரான்சுக்கு டி.எம்.கிருஷ்ணா வந்தபோது, அந்த மாணவர்களுக்கு அவர் பாடம் நடத்தினார்.
இந்திய கலாச்சாரம் மற்றும் இசை எனக்கு பிடிக்கும். எனது தந்தை இந்த இசையை கற்றுக் கொள்ள என்னை கட்டாயப்படுத்தினார். ஆனால், நான் பள்ளி படிப்பு, இதர அனைத்து விஷயங்களை நிறைவடைந்த பிறகு, வயதான காலத்தில் கற்றுக் கொள்கிறேன் எனது தந்தையிடம் கூறினேன். கிருஷ்ணா அவர்களின் வகுப்பை கேட்ட பிறகு, நான் ஒரு வகுப்பு எடுக்க தொடங்கும் அளவுக்கு தயாராகிவிட்டேன்.
என்னை அறியாமல் நானே பாட தொடங்கிவிட்டேன். அதனால் பள்ளி படிப்பு முடிந்த பிறகு சென்னை வந்து முழுமையாக கற்றுக் கொண்டேன். நான் கற்றுக் கொண்டதற்கு முழுக்க முழுக்க குருஜி கிருஷ்ணா தான் காரணம்.