சிட்னியில் 3வது டெஸ்ட் நடப்பது உறுதி: ஆஸ்திரேலிய கிரிக்கெட் சங்கம்

Must read

சிட்னி: கொரோனா தொற்று பயம் இருந்தாலும், இந்தியா – ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான 3வது டெஸ்ட் சிட்னியிலேயே நடத்தப்படும் என்று ஆஸ்திரேலிய கிரிக்கெட் சங்கம் அறிவித்துள்ளது.

ஏனெனில், சிட்னியில் மூன்றாவது டெஸ்ட் நடத்தப்பட்டால், அங்கிருந்து நான்காவது டெஸ்ட் நடைபெறவுள்ள பிரிஸ்பேன் செல்வது கடினமாகிவிடும் என்று கூறப்படுகிறது. பிரிஸ்பேன் பகுதியில், கொரோனா காரணமாக அதிகமான எல்லைக் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

மூன்றாவது டெஸ்ட் போட்டி, 2021ம் ஆண்டு ஜனவரி 7ம் தேதி துவங்குகிறது.

“எத்தனை சவால்கள் இருந்தாலும், மூன்றாவது டெஸ்ட் போட்டி, சிட்னி மைதானத்திலேயே நடத்தப்படும் என்பதை அறிவிப்பதில் நான் மகிழ்ச்சியடைகிறேன். சிட்னியில் நிலவும் கொரோனா சூழலை நாங்கள் தொடர்ந்து ஆய்வுசெய்து வருகிறோம். இந்நிலையில், சிட்னியிலேயே மூன்றாவது டெஸ்ட்டை நடத்துவதற்கு முடிவு செய்துள்ளோம்” என்றார் அந்நாட்டு கிரிக்கெட் சங்க இடைக்கால சிஇஓ நிக் ஹாக்லே.

 

More articles

Latest article