பெங்களூரு..

நேற்று நடைபெற்ற 3வது டி20 போட்டியில் இந்திய அணியினர்  அதிரடியாக விளையாடினர். இதன் காரணமாக தொடரை கைப்பற்றியது.

முன்னதாக  டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது.

இதனையடுத்து களமிறங்கிய இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 202 ரன்கள் எடுத்தது.  இந்திய அணி வீரர் சுரேஷ் ரெய்னா அரைசதம் கடந்து  63 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.

இதையடுத்து களமிறங்கிய தோணி தனது அதிரடி ஆட்டத்தை தொடங்கினர். தொடர்ந்து அரை எடுத்து முன்னேறிய நிலையில் 56 ரன்னில் ஆட்டமிழந்தார்.  இதேபோல் மறுமுனையில் அதிரடியாக ஆடிய யுவராஜ் சிங் 10 பந்துகளில் 27 ரன்கள் எடுத்து இந்திய ரசிகர்களை மேலும் ஆரவாரப்படுத்தினார்.
இந்திய அணி 6 விக்கெட்டுக்கு 202 ரன் எடுத்திருந்தது.

இதைத் தொடர்ந்து களமிறங்கிய இங்கிலாந்து அணி 16.3 ஓவரிலேயே அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 127 ரன்னுக்கு ஆட்டமிழந்தது.

இதன் காரணமாக 3வது தொடரையும் இந்திய அணி கைப்பற்றியது,