பாலசோர்:

நடுவானில் எதிரிநாட்டின் ஏவுகணையை தடுத்து தாக்கி அழிக்கும் ஏவுகணை சோதனை இந்தியா வெற்றிகரமாக நடத்தியுள்ளது.

முப்படைகளையும் வலுவடைய செய்யும் வகையில் ஏவுகணை சோதனைகள் அவ்வப்போது நடத்தப்பட்டு வருகிறது. இந்த வகையில், எதிரி நாட்டின் ஏவுகணையை நடுவானிலேயே தடுத்து தாக்கி அழிக்கும் சக்தி கொண்ட ஏவுகணை சோதனை நடந்து வருகிறது. கடந்த பிப்ரவரி 11, மார்ச் 2ம் தேதிகளில் வெற்றிகரமாக சோதிக்கப்பட்டது.

3ம் கட்ட சோதனை ஒடிசா பாலசோரி ராணுவ ஏவுகணை சோதனை தளத்தில் இன்று நடந்தது. இந்த சோதனை வெற்றி பெற்றதாக ராணுவ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இங்கிருந்து தான் அக்னி ரக ஏவுகணை செலுத்தி பரிசோதிக்கப்பட்டது. டாக்டர் அப்துல் கலாம் தீவில் நிலை நிறுத்தப்பட்டிருந்த ஏவுகணை 30 கி.மீ., உயரத்தில் அக்னி ஏவுகணையை தாக்கி அழித்தது.