சென்னை: தமிழ்நாடு சட்டமன்ற கூட்டத்தின் 3வது நாள் அமர்வு தொடங்கியது. வினாக்கள் – விடைகள் நேரத்தில் உறுப்பினர்களின் கேள்விகளுக்கு அமைச்சர்கள் பதிலளித்து வருகின்றனர். உறுப்பினர்கள் கேள்விகளுக்கு சம்பந்தப்பட்ட துறைகளின் அமைச்சர்கள் பதில் அளித்து வருகின்றனர்.

தமிழ்நாடு சட்டமன்றத்தின் புத்தாண்டு கூட்டத்தொடர் ஜனவரி 20ந்தேதி ஆளுநர் உரையுடன் தொடங்கியது. ஆனால்,ஆளுநர் உரையை வாசிக்க மறுத்து வெளியேறியதால், சபாநாயகர் ஆளுநர் உரையை வாசித்தார். அதைத்தொடர்ந்து அவை ஒத்திவைக்கப்பட்டது. பின்னர் 2வது நாள் அமர்வு நேற்று (21ந்தேதி) தொடங்கியது. இதில், மறைந்த எம்எல்ஏக்கள் மற்றும் முக்கிய நபர்களுக்கு இரங்கல் தீர்மானம் வாசிக்கப்பட்டு அவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில், அனைத்து உறுப்பினர்களும் சில நொடிகள் எழுந்து நின்று மவுன அஞ்சலி செலுத்தினர். பின்னர்  சபை ஒத்தி வைக்கப்பட்டது.

இந்த நிலையில், இன்று 3வது நாள் அமர்வு தொடங்கி நடைபெற்ற வருகிறது.  இன்று காலை 9.30 மணிக்கு  வழக்கமான நடைமுறைகளுடன் தொடங்கியது. இதையடுத்து, கேள்வி நேரம் தொடங்கியது. இந்த நேரத்தில் ல் உறுப்பினர்களின் கேள்விகளுக்கு துறை சார்ந்த அமைச்சர்கள் பதில் அளித்து வருகின்றனர்.

 

[youtube-feed feed=1]