சண்டிகர்: இந்திய விமானப்படையில் உள்ள மிக் போர் விமானம் விழுந்து நொறுங்கியதில் விமானி பலியானார். இந்த ஆண்டு நடைபெற்ற 3வது விபத்து என்று கூறப்படுகிறது. தொடர் விபத்துக்கள் விமானிகளிடையே அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.
இந்திய விமானப் படையில் உள்ள போர் விமானங்கள் மூலம், இந்திய விமானப்படை வீரர்கள் தினமும் பயற்சி மேற்கொண்டு வருவது வழக்கம்.அதுபோல பஞ்சாப் மாநிலம் ஜலந்தர் அருகே உள்ள விமானப்படை தளத்தில் இருந்து, பயிற்சிக்காக மிக்-21 ரக போர் விமானத்தை எடுத்துச்சென்ற விமானி பயிற்சியின்போது, விபத்துக்குள்ளானது.
இந்த விமானம் பயிற்சி தளத்தில் இருந்து, மேலெழும்பிய சிறுது நேரத்திலேயே தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டதாகவும், இதனால் விமானம் கட்டுப்பாட்டை இழந்தத நிலையில்,நள்ளிரவு 1 மணி அளவில், பஞ்சாபின் மோகா அருகே தரையை நோக்கி வேகமாக பாய்ந்து விழுந்து நெறுங்கியதாக கூறப்படுகிறது.
விமானம் கீழே விழுந்த வேகத்தில் தீ பிடித்து எரிந்து சாம்பலாகி உள்ளது. இந்த விபத்தில், விமானி அபினவ் சவுத்ரி உயிரிழந்தார். சம்பவ இடத்திற்கு மீட்பு படையினர் விரைந்துள்ள நிலையில் விபத்து குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
விமானனி மறைவுக்கு இந்திய விமானப்படை இரங்கல் தெரிவித்துள்ளது. விபத்து தொடர்பாக உரிய விசாரணைக்கும் உத்தரவிட்டுள்ளது.