ஐதராபாத்

ஆந்திர முதல்வர் சந்திர்பாபு நாயுடு குறித்து அவதூறு பரப்ப்பியதாக 39 பேர் கைது செய்யபட்டுள்ளனர்.

தற்போது ஆந்திராவில், முதல்வர் சந்திரபாபு நாயுடு தலைமையில் தெலுங்கு தேசம் – ஜனசேனா – பாஜக கூட்டணி ஆட்சி அமைந்துள்ளது., முதல்வர் சந்திரபாபு நாயுடு மற்றும் அவரது குடும்பத்தினர் குறித்து, சமூக வலைதளங்களில் அவதுாறு கருத்துகள் அதிகளவில் வெளியாகி வருகின்றன.

இவற்றில் துணை முதல்-மந்திரி பவன் கல்யாண் மற்றும் அவரது மகள்கள் குறித்தும், மாநில காங்கிரஸ் தலைவர் ஒய்.எஸ்.ஷர்மிளா குறித்தும் இதில் விமர்சனங்கள் இடம்பெற்றதை அடுத்து, அது தொடர்பாக சைபர் கிரைம் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதில் முன்னாள் முதல்-வர் ஜெகன்மோகன் ரெட்டியின் ஒய்.எஸ்.ஆர்.காங்., கட்சி ஆதரவாளர்கள் உட்பட பல்வேறு தரப்பினர் இதுபோன்ற செயல்களில் ஈடுபட்டது கண்டுபிடிக்கப்பட்டது.

முதல்வர் உள்ளிட்டோர் தொடர்பாக அவதுாறு கருத்துகளை வெளியிட்ட சமூக வலைதளங்களுக்கு விளக்கம் கேட்டு, இதுவரை 67 நோட்டீஸ்கள் அனுப்பப்பட்டுள்ளன.  காவல்துறையினர் இதுவரை மொத்தம், 100 வழக்குகள் பதிவு செய்து 39 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

முன்னாள் முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி,

”தேர்தல் பிரசாரத்தின் போது வழங்கிய வாக்குறுதிகளை தெலுங்கு தேசம் கட்சி இதுவரை நிறைவேற்றவில்லை. மக்களை ஏமாற்றிய இந்த அரசு மீது ஏன் வழக்கு பதிவு செய்யவில்லை? இது குறித்து கேள்வி எழுப்பினால் கைது செய்வோம் என மிரட்டுகின்றன. கடந்த ஒரு வாரத்தில் மட்டும் ஒய்.எஸ்.ஆர்.காங்., கட்சி ஆதரவாளர்கள், 49 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். ”

என்று தெரிவித்துள்ளார்.