சென்னை: கொரோனா காலக்கட்டங்களில்,  அரசு மருத்துவமனைகளில் 3,82,444 பிரசவங்கள் சிறப்பான முறையில் நடைபெற்றுள்ளதாக அமைச்சர் விஜயபாஸ்கர் சட்டப்பேரவையில் தெரிவித்தார்.

தமிழக சட்டமன்றத்தின் 2வது நாள் கூட்டம் இன்று நடைபெற்றது. இதில் நீட், கொரோனா உள்பட பல்வேறு பிரச்சினைகள் குறித்து காரசார விவாதங்கள் நடைபெற்றன.

கொரோனா தொடர்பான விவாதத்தில் கலந்துகொண்டு பேசிய தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர்,.  கொரோனா காலக்கட்டமான ஏப்ரல் முதல் ஆகஸ்ட் மாதம் வரை அரசு மகப்பேறு மருத்துவமனையில் மட்டும் 3,82,444 பிரசவங்கள் சிறப்பாக செய்யப்பட்டுள்ளது. கொரோனாவால் பாதிப்படைந்த 4,620 கர்ப்பிணிகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது என்றும் கூறினார்.