சென்னை போயஸ்கார்டனில் உள்ள வேதா நிலையத்தில் அதிமுக பொதுச்செயலாளரும், முன்னாள் முதல்வருமான ஜெயலலிதா, சுமார் 40 ஆண்டுகளாக வசித்து வந்தார். அவர் கடந்த 2016-ம் ஆண்டு டிசம்பர் 5-ந் தேதி மரணம் அடைந்தார்.
அதைத்தொடர்ந்து, கடந்த 2017-ம் ஆண்டு ஆகஸ்டு 17-ந் தேதி தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, ஜெயலலிதா வாழ்ந்த வீடான ‘வேதா நிலையம்’ இல்லம் நினைவில்லம் ஆக்கப்படும் என அறிவித்திருந்தார். அதைத்தொடர்ந்து, அதற்கான நிலம் கையகப்படுதுதல் பணிகள் நடைபெற்றது. அப்போது, ஜெயலலிதாவின் 3 அடுக்கு மாடி வீட்டில் பலா மரம்-1, மா மரம் -2, தென்னை-5, வாழை மரங்கள்-5 உள்ளதாகவும் அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.
வேதா நிலையம் இல்லத்தில் உள்ள ஜெயலலிதா பயன்படுத்திய பொருட்களை பராமரிக்க அறிவிக்கை வெளியிட்டு, அதற்காக ‘புரட்சித் தலைவி டாக்டர் ஜெ ஜெயலலிதா அறநிறுவனத்தை அமைக்க அவசர சட்டம்’ பிறப்பிக்கப்பட்டது.
நில எடுப்பு சட்டத்தின்படி 12 சதவீதம் என்ற வீதத்தில் கூடுதல் சந்தை மதிப்பு சேர்த்து, மொத்த இழப்பீடு தொகை ரூ.67 கோடியே 88 லட்சத்து 59 ஆயிரத்து 690 என கணக்கீடு செய்யப்பட்டுள்ள நிலையில், உத்தேச தொகையில் குறைவாக இருந்த மீத இழப்பீட்டு தொகையான ரூ.7 லட்சத்து 98 ஆயிரத்து 465 தொகைக்கு ஒப்புதல் வழங்கப்பட்டது.
இந்தநிலையில், நிலம் கையகப்படுத்துதல் தொடர்பான இழப்பீட்டுத் தொகை பற்றிய அறிவிப்பை நில எடுப்பு அலுவலரான தென் சென்னை கோட்டாட்சியர் 22-ந் தேதி வெளியிட்டார். அவர், கூறிய இழப்பீட்டுத்தொகையான ரூ.67 கோடியே 88 லட்சத்து 59 ஆயிரத்து 690, நகர உரிமையியல் நீதி மன்றத்தில் செலுத்தப்பட்டு, வேதா இல்லம் சொத்து அரசின் சொத்தாகி உள்ளது. எனவே, வாரிசுதாரர்கள் மற்றும் உரிமை கோருபவர்கள் அந்த நீதிமன்றத்தை நாடி, தங்களுக்குரிய தொகையை பெற்றுக்கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டது.
அங்குள்ள நிலம் மற்றும் ஜெயலலிதாவின் பொருட்களை பராமரிக்கவும், நிர்வகிக்கவும் ‘புரட்சித் தலைவி டாக்டர் ஜெ ஜெயலலிதா அறநிறுவனத்திற்கு’ ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
இதையடுத்து, போயஸ் தோட்டத்தில் உள்ள வேதா நிலையம் ஜெயலலிதா நினைவிடமாக மாற்றப்பட உள்ளது. இது தொடர்பாக ஜெயலலிதா வாழ்ந்த வேதா நிலையம் அரசுடைமையானது என அரசிதழில் வெளியிடப்பட்டு உள்ளது.
அதன்படி,
அரசுடமையாக்கப்பட முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் போயஸ் கார்டன் வீட்டில் 4 கிலோ 372 கிராம் தங்கம் இருப்பதாகவும், 601 கிலோ வெள்ளி பொருட்கள் உள்பட மொத்தம் 32,721 பொருட்கள் உள்ளன என்று தெரிவித்து உள்ளது.
அத்துடன், ஜெயலலிதா வீட்டில் 38 ஏசி, 11 டிவி,10 பிரிட்ஜ் ஆகியவை உள்ளன என்றும் குறிப்பிட்டு உள்ளது.

ஜெ.வீட்டில் உள்ள பொருட்கள் விவரம்:
1. தங்கம் 14 பொருட்கள் : 4 கிலோ 372 கிராம்
2. வெள்ளி 867 பொருட்கள்: 601 கிலோ 424 கிராம்
3. வெள்ளி பொருட்கள் (சிறிய பாத்திரங்கள்) 162 பொருட்கள்
4. தொலைக்காட்சிகள் – 11
5. ரெஃப்ரிஜெரா டோர்ஸ் – 10
6. ஏர்கண்டிஷனர்கள் – 38
7. தளவாட பொருட்கள் (பர்னிச்சர்கள்) (சமையலறை ரேக்குகள் தவிர) 556
8. சமையலறை பாத்திரங்கள் 6514
9. சமையலறை பர்னிச்சர்கள் மற்றும் தளவாடங்கள் 12
10. கட்லரி பொருட்கள் (ஷோகேஸ்) – 1055
11. பூஜா பாத்திரங்கள் – 15
12. ஆடை பொருட்கள் / துண்டுகள் /படுக்கை விரிப்புகள் / பிற துணி பொருட்கள் நான் தலையணை கவர்கள் நான் திரைச்சீலைகள் / பாதணிகள் – 10438
13. தொலைபேசிகள் நான் மொபைல் போன் – 29
14. சமையலறை மின் பொருட்கள் – 221
15. மின்சார பொருட்கள் – 25
16. புத்தகங்கள் – 8376
17. மெமெண்டோஸ் – 394
18. உரிமம், நீதிமன்ற ஆவணங்கள் போன்ற ஆவணங்கள்
மற்றும் IT அறிக்கைகள் – 653
19. எழுதுபொருள் பொருட்கள் – 253
20. அலங்கார பொருட்கள் – 1712
21. சூட்கேஸ்கள், பைகள் – 65
22. ஒப்பனை பொருட்கள் 108
23. கடிகாரங்கள் – 6
24. கேனான் ஜெராக்ஸ் இயந்திரம் 2525 மாடல் – 1,
25. லேசர் பிரிண்டர் டி 158 மாடல் – 1
26. இதர பொருட்கள் 95
மொத்தம் 32721