டெல்லி: நாடு முழுவதும் கொரோனா 2வது அலை பரவி வருவதால் மத்திய மாநில அரசுகள் மீண்டும் கொரோனாகட்டுப்படுகளை தீவிரப்படுத்தியுள்ளது. இந்த நிலையில்,  தலைநகர் டெல்லியில் உள்ள பிரபல மருத்துவமனையான சர் கங்கா ராம் மருத்துவமனையில் பணியாற்றி வரும்  37 மருத்துவர்களுக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளதாக கூறப்படுகிறது. இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

நாடு முழுவதும் கொரோனா மீண்டும் தீவிராக  பரவி வருகிறது. இதனால் பல்வேறு மாநிலங்களில் கடும் கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டு வருகின்றன. குறிப்பாக மகாராஷ்டிரா, டெல்லி, குஜராத், தமிழகம் உள்பட 12 மாவட்டங்களில் தொற்று பரவல் அதிகரித்து வருகிறது. டெல்லியில், நேற்று ஒரு நாளில் 7,437 பேருக்கு பாதிப்பு உயர்ந்துள்ளதுடன், 24 பேர் பலியாகி உள்ளனர். இது மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இந்த நிலையில், டெல்லி சர் கங்கா ராம் மருத்துவமனையில் 37 மருத்துவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர்களில்  32 பேர் வீட்டிலேயே தங்களை தனிமைப்படுத்திக்கொண்டுள்ளனர். 5 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப்பெற்று வருகின்றனர்.

இதுகுறித்து கூறிய மருத்துவமனை அதிகாரிகள்‘, ‘சர் கங்கா ராம் மருத்துவமனையில் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது, ,இதனால் அங்கு பணியாற்றி வரும் மருத்துவர்களுக்கும் தொற்று பாதிப்பு ஏற்பட்டு வருகிறது என்று தெரிவித்துள்ளனர்.