சென்னை:
வேதாரண்யத்தில் நடந்த இரு தரப்பினரிடைய ஏற்பட்ட மோதல் தொடர்பாக 36 பேர் கைது செய்யப்பட்டு உள்ளதாக காவல்துறை தெரிவித்து உள்ளது.
நாகை மாவட்டம் வேதாரண்யத்தில் நேற்று மாலை இரு சமூகத்தினர் இடையே திடீரென மோதல் ஏற்பட்டது. இந்த கலவரத்தில் காவல் நிலையம் எதிரே நின்றிருந்த கார் தீவைத்துக் கொளுத்தப் பட்டது. அதைத்தொடர்ந்து மற்றொரு தரப்பினர், அங்கு நிறுவப்பட்டிருந்த அம்பேத்கர் சிலையை சேதப்படுத்தினர். இதனால் கலவரம் மேலும் பரவி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதையடுத்து காவல்துறையினர் குவிக்கப்பட்டு கலவரத்தை கட்டுப்படுத்திய நிலையில், உடைக்கப்பட்ட சிலைக்கு பதிலாக புதிய சிலையும் நிறுவப்பட்டது. இந்த நிலையில், கலவரம் தொடர்பாக இதுவரை 37 பேரை கைது செய்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்து உள்ளனர்.
தற்போது அந்த பகுதியில் 300-க்கும் மேற்பட்ட போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு வருகின்றனர்.