சென்னை: சென்னையில் கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில், கொரோனா கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகள் 36 இடங்களாக உயர்ந்துள்ளது. சமீப காலத்தில் சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் குறைந்து வந்த கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகள் மீண்டும் அதிகரிக்கத் துவங்கியுள்ளது என சென்னை மாநகராட்சி தெரிவித்து உள்ளது.
தமிழகத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளோர் மொத்த எண்ணிக்கை  6,19,996 ஆக உயர்நதுள்ளதுஅதிகபட்சமாக சென்னையில் இதுவரை 1,72,773  பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர்கடந்த வாரம் சென்னையில் தொற்று பாதிப்பு 0.5 சதவிகிதமாக உயர்ந்த நிலையில், தற்போது, மேலும் பாதிப்பு அதிகரித்து, 2.7 சதவிகிதமாக உயர்ந்துள்ளதாக மாநகராட்சி தெரிவித்து உள்ளது. மேலும்தடை செய்யப்பட்ட பகுதிகள் 10 ஆக உயர்ந்திருந்தது. இன்று அவரை 36 ஆக உயர்நதுள்ளது.
சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் குறைந்து வந்த கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகள் மீண்டும் அதிகரிக்கத் துவங்கியுள்ளது. தற்போது வரை மண்டலம் 6,7,8,9,10,11,12,13 மற்றும் 15வது மண்டலங்களில் மட்டும் மொத்தம் 36 கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகள் உள்ளதாக மாநகராட்சி அறிவிப்பு வெளியிட்ட உள்ளது.