மகாராஷ்டிர மாநிலம் மும்பை, நெரிசல் மிகுந்த நகரம் என்பது உலகம் அறிந்த செய்தி.
வேலை பார்ப்பவர்களுக்கு ரயில் பயணம் தான், வசதியானது.
நீண்ட தூர பயணம் செய்ய மும்பை வாசிகள் ரயில்களைத்தான் பயன் படுத்துகிறார்கள்.
கொரோனா காரணமாக கடந்த மார்ச், மாதம் 15 ஆம் தேதி முதல் மும்பையில் ரயில்கள் நிறுத்தப்பட்டன.
ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்ட போது, ரயில் சேவை சில மாதங்களுக்கு பிறகு மீண்டும் ஆரம்பமானது.
ஆனால் பல கட்டுப்பாடுகள்.
அரசு ஊழியர்கள், அத்தியாவசிய பணி செய்வோர் மட்டுமே ரயிலில் செல்ல அனுமதிக்கப்பட்டனர்.
கடந்த ஒன்றாம் தேதி முதல் அனைவரும் ரயிலில் பயணம் செய்யலாம் என அறிவிக்கப்பட்டதால், மும்பை புறநகர் ரயில் நிலையங்கள் களை கட்டியுள்ளன.
அன்று முதல் மும்பை புறநகர் ரயில்களில் தினமும் 36 லட்சம் பேர் பயணித்து வருவதாக ரயில்வே செய்தி குறிப்பில் தெரிவிக்கபட்டுள்ளது.
– பா. பாரதி