டெல்லி: வந்தே பாரத் திட்டத்தின்கீழ் அமெரிக்காவில் இருந்து இந்தியாவுக்கு 36 விமானங்கள் இயக்கப்படும் என்று ஏர் இந்தியா தெரிவித்துள்ளது.
இந்தியாவில் கொரோனா வைரஸ் காரணமாக மார்ச் 23ம் தேதியில் இருந்து சர்வதேச விமான போக்குவரத்தை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. மருந்து பொருட்களுக்கான விமான சேவைக்கு மட்டுமே அனுமதி அளித்தது.
ஊரடங்கு தொடர்ந்து முடிவுக்கு வராததால் வெளிநாட்டில் சிக்கித் தவிக்கும் நபர்களின் உறவினர்கள் நீதிமன்றங்களை நாடினர். ஆகையால் மத்திய அரசு மே 6 முதல் வந்தே பாரத் திட்டம் மூலம் வெளிநாட்டில் சிக்கியவர்களை சிறப்பு விமானங்கள் மூலம் அழைத்து வருகிறது.
இந் நிலையில், வந்தே பாரத் திட்டத்தின்கீழ் அமெரிக்காவில் இருந்து இந்தியாவுக்கு ஜூலை 11 முதல் 19ம் தேதி வரை 36 விமானங்கள் இயக்கப்பட உள்ளதாக ஏர் இந்தியா தெரிவித்துள்ளது.