சென்னை: மத்திய பாஜக அரசு சமீபத்தில் தொடங்கிய மேற்கூரை சோலார் திட்டத்துக்கு (சூரியசக்தி மூலம் வீடுகளுக்கு மின்சாரம் ) தமிழ்நாட்டில் பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது. இந்த திட்டத்தை தமிழ்நாடு மின் பகிர்மான கழகம் தொடங்கிய இரு மாதங்களில் சுமார் 35ஆயிரத்துக்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் பதிவாகி உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.
பிரதமர் நரேந்திர மோடி சமீபத்தில் (பிப்ரவரி 2024), ‘பிஎம் சூர்யா கர் முஃப்ட் பிஜ்லி யோஜனா’ (https://pmsuryaghar.gov.in/) என்ற மேற்கூரை சோலார் திட்டத்தை தொடங்கி வைத்திருந்தார். இதற்கு தமிழ்நாட்டில் மிகுந்த வரவேற்பு கிடைத்துள்ளது. இந்த ஆண்டு 1 கோடி கூரை சூரிய மின் இணைப்புகளை வழங்க மத்திய அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது, அதே நேரத்தில் டாங்கட்கோ இந்த ஆண்டு 10 லட்சம் இணைப்புகளை வழங்கும் இலக்கை அடைய விரும்புகிறது.
மத்திய அரசின் சமீபத்தில் தொடங்கப்பட்ட மேற்கூரை சோலார் பிரச்சாரம், மாநிலத்தின் பசுமை எரிசக்தி உந்துதலுக்கு மிகவும் தேவையான நிரப்புதலை அளித்துள்ளதாகத் தெரிகிறது, தமிழ்நாடு உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் (Tangedgo) இந்த திட்டம் தொடர்பான அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. அதில், இதுவரை 35,300 விண்ணப்பங்களால் வந்துள்ளதாக கூறப்படுகிறது.
தமிழ்நாடு மின்சார வாரியம் தரவுகளின்படி, தமிழ்நாட்டில் சுமார் 17,500 உள்நாட்டு கூரை சூரிய இணைப்புகள் மட்டுமே உள்ளன, அவற்றில் 6,500 சென்னையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்த திட்டம் ஏற்கனவே இருந்த திட்டம் என்றும், அதே மானியத்துடன் உள்ள இந்த திட்டத்தை தற்போது மறுபெயரிடப்பட்டுள்ளதுடன், பல்வேறு சலுகைகள் வழங்ககப்பட்டு உள்ளது. தற்போது, 3 கிலோவாட் வரையிலான கூரை இணைப்புகளுக்கான சாத்தியக்கூறு ஆய்வில் இருந்து விலக்கு அளித்துள்ளதால், பொதுமக்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது.
இந்த ஆண்டு 1 கோடி கூரை சூரிய மின் இணைப்புகளை வழங்க மத்திய அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது, அதே நேரத்தில் தமிழ்நாடு அரசு மின்வாரியம், இந்த ஆண்டு 10 லட்சம் இணைப்புகளை அடைய விரும்புகிறது. மேலும், 3kWக்கு மேல் உள்ள பயன்பாடுகளுக்கான சாத்தியக்கூறு ஆய்வை டாங்கெட்கோ விரைவுபடுத்த வேண்டும் என கோரிக்கைகளை எழுந்துள்ள நிலையில், சில இடங்களில், சாத்தியக்கூறு அறிக்கையை முடிக்க இன்னும் ஒரு மாதம் ஆகும். அதற்கு தீர்வு காணப்பட்டால், குறைந்த நேரத்தில் அதிக இணைப்புகளை ஏற்படுத்த முடியும் என்றும், இந்த திட்டத்தை பல நுகர்வோர் தவறாகப் புரிந்து கொண்டுள்ளனர் என்றும், இந்த திட்டத்தின்படி, அவர்கள் செய்ய வேண்டிய ஆரம்ப முதலீடு குறித்த புரிதல் இல்லை என்றும் அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.
இந்த மேற்கூரை சோலார் இணைப்புகளை நிறுவுவதற்கு வங்கிகளில் கடன் வழங்க வேண்டும் என்று மத்தியஅரசு உத்தரவிட்டு இருப்பதாக கூறிய அதிகாரிகள், இதனால் மக்கள் ஆரம்ப முதலீட்டைப் பற்றி கவலைப்படத் தேவையில்லை. இந்த திட்டத்தின்படி, நுகர்வோர்களுக்கு கடன் வழங்க வங்கிகளுக்கு இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டால், பணிகள் வேகமாக நடக்கும் என்று கூறிய அதிகாரிகள், மேற்கூரை சோலார் மின் உற்பத்திக்கான ஆர்வம், சென்னையை விட, பிற மாவட்டங்களில் அதிகம். விற்பனையாளர்களால் பேனல்கள் மற்றும் இன்வெர்ட்டர்களை நிறுவுதல் மற்றும் இன்வெர்ட்டர்கள் கிடைக்கும் சாத்தியக்கூறு அறிக்கை வெளியிடப்பட்ட பிறகு, இதன் பயன்பாடு மேலும் அதிகரிக்கும் என்றும் அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்து உள்ளனர்.
பிஎம் சூர்யா கர் முஃப்ட் பிஜ்லி யோஜனா’ (PM Surya Ghar Muft Bijli Yojana)
மத்திய அரசு அறிவித்துள்ள இந்த திட்டத்தின்படி, மானியத்துடன் கூடிய மேற்கூரை சோலார் திட்டத்தில் சேர விரும்பும் பொதுமக்கள், தபால்காரர் மூலம் வீட்டில் இருந்தபடியே பதிவு செய்யும் முறையை அஞ்சல் துறை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த திட்டத்தின் மூலம் வீடுகளுக்கு மேற்கூரை சோலார் பேனல்களை நிறுவவும், சூரிய சக்தியை மின்சாரத்துக்குப் பயன்படுத்தவும் மானியம் வழங்கப்படுகிறது.
வீட்டு மேற்கூரையில் சோலார் பேனல்களை நிறுவுவதன் மூலம் வீட்டின் மின்சார செலவைக் குறைப்பதே இத்திட்டத்தின் முக்கிய நோக்கமாகும். மேற்கூரை சோலார் திட்டத்தின் மூலம் ஒரு கோடி வீடுகளுக்கு ஒவ்வொரு மாதமும் 300 யூனிட் இலவச மின்சாரம் வழங்கப்படும். அத்துடன், சோலார் பேனல்களின் விலையில் 40 சதவீதம் வரை மானியம் வழங்கப்படும்.
இந்தத் திட்டத்தில் சேர விரும்பும் பொதுமக்கள் தபால் துறை மூலமாக வீட்டில் இருந்தபடியே பதிவு செய்துகொள்ளும் முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதன்படி, சென்னை வடகோட்டஅஞ்சல் துறையின் சார்பில் தபால்காரர்கள் வீட்டுக்கே வந்து பதிவு செய்து தருவார்கள். மின் இணைப்பு வாடிக்கையாளர் எண், கடைசி 6 மாதத்துக்குள் கட்டப்பட்ட ஏதேனும் ஒருமின்ரசீதின் நகல் ஆகிய ஆவணங்களை கொண்டு தங்களது பகுதி தபால்காரர் மூலம் இத்திட்டத்தில் வீட்டில் இருந்தபடியே பதிவு செய்துகொள்ளலாம்.
இதுகுறித்த மேலும் விவரங்கள் அறிய 044-28273635 என்றதொலைபேசி எண்ணில் தொடர்புகொள்ளலாம் என்று சென்னை வடகோட்டம், முதுநிலை கோட்ட கண்காணிப்பாளர் (அஞ்சல்) வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
அதன்படி, இந்த திட்டத்திற்கு தமிழ்நாட்டில் அமோக வரவேற்பு கிட்டியுள்ளது. கடந்த ஒன்றரை மாதத்தில், 35,300 விண்ணப்பங்கள் வந்துள்ளதாக தமிழ்நாடு மின் பகிர்மான கழகம் தெரிவித்து உள்ளது.