டில்லி

ரே மாதத்தில் டில்லி பல்கலைக்கழக ஆசிரியர்கள் 35 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சுமார் 3 பேர் மரணம் அடைந்துள்ளனர்.

டில்லியில் இரண்டாம் அலை கொரோனாவால் பாதிப்பு மற்றும் உயிரிழப்பு ஆகியவை மிகவும் அதிகமாக உள்ளது.,  இதுவரை டில்லியில் 14 லட்சத்துக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டு 22,111 பேர் உயிர் இழந்துள்ளனர்.   இந்த பாதிப்பைக் குறைக்க டில்லியில்  கடும் ஊரடங்கு அமலில் உள்ளது.  இதனால் பாதிப்பு சற்று குறைந்து வருவதாகா கூறப்படுகிறது.

டில்லி பல்கலைக்கழகத்தின் கீழ் பல கல்லூரிகள் இயங்கி வருகின்றன.  இந்த கல்லூரிகளில் சுமார் 12 ஆயிரம் பேர் பணி புரிகின்றனர்.  அவர்களில் ஆறாயிரம் பேர் பணி நிரந்தரம் செய்யப்படாத தற்காலிக ஆசிரியர்கள் ஆவார்கள்.

டில்லி பல்கலைக்கழக ஆசிரியர்கள் சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “டில்லியில் ஒரே மாதத்தில் 35 ஆசிரியர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.   இங்குள்ள கல்லூரிகளில் படிக்கும் மாணவர்களுக்கும் பாதிப்பு அதிக அளவில் உள்ளது.  எனவே இவர்களுக்கு சரியான மருத்துவ உதவிகள் அளிக்க வேண்டும்.

இதுவரை 3 ஆசிரியர்கள் மரணம் அடைந்துள்ளனர்.  இது மேலும் அதிகரிக்கலாம் என அஞ்சப்படுகிறது.

மரணம் அடைந்தவர்களுடைய குடும்பத்துக்கு நிதி உதவி மட்டுமின்றி குடும்பத்தில் ஒருவருக்குப் பணி அளிக்க வேண்டும் என துணை வேந்தரைக் கேட்டுக் கொள்கிறோம்.  பணி இடங்களில் கொரோனா முகாம்கள் அமைப்பதைப் போல் நிரந்தர மற்றும் தற்காலிக ஆசிரியர்களுக்குப் பல்கலைக்கழகத்தில் சிகிச்சை மையங்கள் அமைக்கப்பட வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.