சென்னை:

மிழகத்தில் நேற்று பிளஸ்-2 இறுதித் தேர்வை 34ஆயிரம் மாணவ மாணவிகள் தவறவிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அவர்களின் எதிர்காலத்திற்கு தமிழகஅரசு என்ன செய்யப்போகிறது என்ற கேள்வி எழுந்துள்ளது.

உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் இந்தியாவிலும் வேகம் வேகமாக பரவி வருகிறது.. இந்தியாவில் பலி எண்ணிக்கை 10ஐ தாண்டிய நிலையில், வைரஸ் பாதிப்புக்கு 512 பேர் ஆளாக உள்னனர்.

கொரோனா தொற்று காரணமாக இந்த மாதம் முதலே, மக்கள் கூட்டம் கூட விதிக்கப்பட்டுள்ள நிலையில், பொதுத்துறை வாகனங்கள் சேவையும் குறைக்கப்பட்டது. இதனால் பொதுமக்கள் போக்குவரத்து வசதியின்றி பாதிக்கப்பட்டனர்.

இதற்கிடையில், கடந்த மார்ச் மாதம் 2 ஆம் தேதியில் இருந்து 12 ஆம் வகுப்பு பொது தேர்வுகள் நடைபெற்று வருகிறது சில தேர்வுகள் இந்த மாதத்தில் நடைபெற்றன. கடந்த ஒருவார காலமாக கொரோனா தொற்று அதிகரித்து வருவதால், போக்குவரத்து அடியோடு, தடை விதிக்கப்பட்டு, மக்கள் ஊரடங்கும் விதிக்கப்பட்டது. மேலும், கொரோனா அச்சுறுத்தல் காரணமாக,  தேர்வுகளை தள்ளிவைக்க வேண்டும் என்று எதிர்க்கட்சிகளும், சமூக ஆர்வலர்களும், கல்வியாளர்களும் கோரிக்கை வைத்தனர்.

ஆனால், அதை செவிமடுக்காத தமிழக அரசு, திட்டமிட்டபடி பிளஸ்-2, பிளஸ்1 தேர்வுகளை நடத்தியே தீருவோம் என்று பிடிவாதமாக நடத்தி முடிந்தது. மாணவர்களுக்கு முகக்கவசம், சானிடடைசர் உள்பட பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்படும் என்றும், உயர்நீதிமன்றத்தின் அறிவுரையை ஏற்று அரை மணி நேரம் தாமதமாக தேர்வு தொடங்கும் எனவும் அறிவித்தது.

அதைத்தொடர்ந்து, நேற்று பிளஸ்2 மாணவ மாணவிகளுக்கு இறுதித்தேர்வு நடைபெற்ற நிலையில், போக்குவரத்து வசதி மற்றும் கொரோனா அச்சம்காரணமாக,  ஏராளமானோர் தேர்வு எழுத வரவில்லை என்ற தகவல் வெளியாகி உள்ளது.

இந்த ஆண்டு பிளஸ்2 தேர்வை எழுத 8 லட்சத்து 35 ஆயிரத்து 525 மாணவர்கள் தேர்வுக்கு விண்ணப்பத்திருந்த  நிலையில், நேற்றைய  இறுதி தேர்வை மட்டும் சுமார் 34 ,000 மாணவர்கள் எழுதவில்லை என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

34ஆயிரம் மாணவ மாணவிகளின் எதிர்காலம் கேள்விக்குறியாகி உள்ளது. இதற்கு தமிழகஅரசு என்ன பதில் சொல்லப்போகிறது..

கொரோனா வைரஸ் பரவலை தடுக்க நாமும் மத்திய மாநில அரசோடு இணைந்து, வீட்டுவிட்டு வெளியே செல்வதை தவிர்ப்போம்… கொரோனா வைரஸ் கோரப் பிடியில்  இருந்து நம்மை  பாதுகாப்போம்…