சென்னை: தமிழ்நாட்டில் 34 பேரூராட்சிகளை தரம் உயர்த்தி தமிழ்நாடு அரசு அறிவிப்பு வெளியிட்டு உள்ளது, அரதன்படி இரண்டாம் நிலை பேரூராட்சிகள் முதல் நிலை பேரூராட்சிகளாக தரம் உயர்த்தப்படுகிறது.

தமிழ்நாட்டில் மொத்தம் 490 பேரூராட்சிகள் உள்ளன.இவை சென்னை தவிர்த்து மற்ற 37 மாவட்டங்களில் பரவியுள்ளன. அவற்றில், அரியலூர் மாவட்டத்தில் குறைந்தபட்ச எண்ணிக்கையிலும் (2) மற்றும் கன்னியாகுமரி மாவட்டத்தில் அதிக எண்ணிக்கையிலும் (51) பேரூராட்சிகள் உள்ளன. பேரூராட்சிகளில் பல வகைப்பாடுகள் உள்ளன.
இந்த நிலையில், தமிழ்நாடு அரசு 34 பேரூராட்சிகளை தரம் உயர்த்தி அறிவித்து உள்ளது. அதன்படி, 13 இரண்டாம் நிலை பேரூராட்சிகள் முதல் நிலை பேரூராட்சிகளாக தரம் உயர்த்தப்படுகிறது.
10 தேர்வு நிலை பேரூராட்சிகள் சிறப்பு நிலை பேரூராட்சிகளாக தரம் உயர்த்தப்படுகிறது.
8 முதல் நிலை பேரூராட்சிகள் தேர்வு நிலை பேரூராட்சிகளாக தரம் உயர்த்தப்படுகிறது.
3 முதல் நிலை பேரூராட்சிகள் சிறப்பு நிலை பேரூராட்சிகளாக தரம் உயர்த்தப்படுகிறது.
இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
Patrikai.com official YouTube Channel