டில்லி,
ரூ.34 கோடி கருப்பு பணத்தை கள்ள கணக்கு தொடங்கி வங்கியில் டெபாசிட் செய்யததாக கோடக் மகிந்திரா வங்கி மேலாளர் கைது செய்யப்பட்டார்.
போலி வங்கி கணக்குகள் தொடங்கி அதில் ரூ.34 கோடி டெபாசிட் செய்துள்ளதாக அவர் கைது செய்யப்பட்டு, அவர்மீது கிரிமினல் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
பண மதிப்பிழப்புக்கு பிறகு பெருமளவிலான கருப்பு பணங்கள் வங்கிகளில் டெபாசிட் செய்யப்பட்டு வருகிறது. கருப்பு பணத்தை மாற்ற பெரும்பாலான வங்கி அதிகாரிகள் உடந்தையாக உள்ளார்கள் என்றும் தெரியவந்துள்ளது.
டில்லியில் கே.ஜி.மார் பகுதியில் உள்ள கோடக் மகிந்திரா வங்கி மேலாளர், தனது வங்கியில்  9 கள்ள வங்கி கணக்குகளை தொடங்கி, அதில் 34 கோடி ரூபாய் டெபாசிட் செய்துள்ளது அமலாக்கத் துறைக்கு தெரிய வந்தது.
அதைத்தொடர்ந்து மத்திய அமலாக்கத்துறை விசாரணை செய்து, பண மோசடி சட்டப்படி  நேற்று இரவு அதிரடியாக வங்கி மேலாளரை கைது  கோர்ட்டில் ஆஜர்படுத்தினர்.
மேலும், அமலாக்கத்துறையின் புகாரின்படி, மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் வங்கி மேலாளர் மீது PMLA சட்டத்தின்படி முதல் தகவல் அறிக்கை பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
வங்கியின் மேலாளரே இதுபோன்ற குற்றச்செயலில் ஈடுபட்டிருப்பது  அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.