கோதண்டராமன் சபாபதி அவர்களின் முகநூல் பதிவு..
 
13599931_1088002524591889_2581898149333959546_n
 
ரமலான் நேரத்தில்…
“ஹலோ நான் கோதண்டம் பேசுறேன்”
“ம் சொல்லுடா! நல்லாருக்கியா?”
“நான் உன்கிட்ட பேசுறதுக்காக போனடிக்கல. நல்ல நாளும் அதுவுமா உன்ன யாரு போன எடுக்கச்சொன்னது? போன அண்ணிகிட்ட குடு”.
(போன் கை மாறும்)
“அண்ணி ரம்ஜான் வாழ்த்துகள் அண்ணி!”
“ம். பிரியாணி சாப்பிட வாங்க!”
தீபாவளி நேரம்….
“ஹலோ”
“ம்,! சொல்லுங்க! நல்லாருக்கீங்களா! மழ பெஞ்சுதா?”
” போன அண்ணன்கிட்ட குடுங்க அண்ணி.மழய அப்புறம் விசாரிக்கலாம்.”
“ம்.சொல்லுடா”
“தீபாவளி வாழ்த்துகள். எண்ணெய் தேய்ச்சு குளிச்சுட்டியா? புது ட்ரெஸ் எடுத்தியா?”
“ம்.ட்ரெஸ் எடுத்து குடுத்தீங்களான்னு அண்ணிகிட்ட நீயே கேளேன்!”.
இப்படியாக அண்ணனையும் அண்ணியையும் கலாய்க்கலாம்.ஆனால் இந்தக்குழந்தைகளை கலாய்க்க முடியாது.
இவர்கள் அப்பாவின் தீபாவளியையும் அம்மாவின் ரம்ஜானையும் சேர்த்தே கொண்டாடும் கொடுத்துவைத்த குழந்தைகள்.
கேரளாவில் வசிக்கும் என் அண்ணன் சங்கர் அண்ணி ரம்லா தம்பதியரின் மகள்கள்.
(தற்போதைக்கு)
ரமாலான் வாழ்த்துக்கள் செல்லங்களுக்கு.!