மத்திய நீர் வளம், ஆறுகள் மேம்பாடு மற்றும் கங்கை புனரமைப்புத் துறையின் அமைச்சர் உமாபாரதி ஒரு தனியார் நாளிதழுக்கு அளித்துள்ள பேட்டியின் முக்கிய விவரம் :
- நதிகள் இணைப்பதில் உள்ள பெரிய முட்டுக்கட்டை எதுவென்றால், இந்தியாவில் உள்ள எந்த மாநிலமும் தங்களிடம் தேவைக்கதிகமாக தண்ணீர் உள்ளதென்பதை ஒப்புக்கொள்ள மறுப்பதே ஆகும். எனவே அரசு தற்பொழுது ஐரோப்பிய மற்றும் ஆஸ்திரேலிய அரசுகளுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் போட்டுள்ளது.
- பிரதமர் மோடி அவர்கள் என்னிடம், நதிநீர் இணைப்பை மாநில அரசுகள் ஒப்புக்கொண்டுள்ள இடங்களில் மட்டுமே நிறைவேற்ற கேட்டுகொண்டுள்ளார். எங்களிடம் 2060 வரை மும்பையின் தண்ணீர் தேவையைப் பூர்த்திச்செய்யும் திட்டம் உள்ளது.
- ஜூலை 2014 கேபினெட் அமைச்சரவைக் கூட்டத்தில் கேன்-பெட்வா திட்டம் முன்மொழியப் பட்ட பொழுது மேனகா காந்தியும் கலந்துக்கொண்டார். அவர் இந்தத் திட்டத்திற்கு எந்த எதிர்ப்பும் தெரிவிக்கவில்லை. எனவே பத்து வருடங்களுக்கு முன்னர், மேனகாகாந்தி நதிநீர் இணைப்பை எதிர்த்தது குறித்து கவலைப்படத் தேவை இல்லை.
- நதி நீர் இனைப்பைச் சாத்தியப் படுத்த 11 லட்சம் கோடி தேவை. அரசு மட்டும் இதனை நிகழ்த்திவிட முடியாது. தனியாரின் துணையுடன் இது நிறைவேற்றப் படும். விவசாயம் சார்ந்த தொழில்கள் மூலமே ஒரு நாடு வளர்ச்சியடைய முடியும். தொழிசாலைகளால் அல்ல. எனவே நதி நீர் இணைத்து, இன்று ரூபாய் 50,000 சம்பாதிக்கும் விவசாயியை 5 லட்சம் சம்பாதிக்க வைக்க இந்த திட்டத்தால் முடியும்.
- டாமன் கங்கை- பிஞ்சால் திட்டம் மற்றும் பர் டபி- நர்மதா திட்டம் இன்னும் ஏழு ஆண்டுகளில் தயாராகிவிடும்.
- சம்பல்- காலிசிந்து, மத்தியப் பிரதேச மற்றும் ராஜஸ்தானில் சிலச் சிக்கல் உள்ளது. இந்த நாங்கு திட்டங்களும் ஏகழு ஆண்டுகளில் முடிக்க முடியும்.
- இந்தத் திட்டங்களால் பாதிக்கப் படும் மக்கள் குறித்து சிந்திப்பதைவிட, இந்தத் திட்டங்களால் கிடைக்கப் போகும் நன்மைகளைப் பாருங்கள். பாதிக்கப் படும் மக்களுக்கு கால்நடை வழங்கி மாற்றுத் தொழில் செய்ய ஏற்பாடு செய்யப்படும். இது குறித்து போக்குவரத்து அமைச்சர் நிதின் கட்காரியிடம் 31 புதிய நதிகள் ஏற்படுத்த யோசனை கூறப்பட்டுள்ளது. அவர் 101 உள்நாட்டு நீர் போக்குவரத்து திட்டங்களுடன் சேர்த்து இதனையும் கையாள்வார். இதன் மூலம் பாதிக்கப் படும் மக்கள் நல்வாழ்வு பெறுவர்.
- குஜராத்தில் மக்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை. மத்தியப் பிரதேசத்தில் இருந்த ஒய்ரச்சனையை நான் 2003ல் முதல்வராக இருந்த பொழுது தீர்துவைத்தே. திக் விஜய் சின்க் தேவை யில்லாமல் சமூகவியலாலர்களை தூண்டி விட்டு அநாகரிக அரசியல் விளையாடுகின்றார்.
- நதிகள் இணைப்பதன் மூலம் மக்கள் போக்குவரத்து ஏற்றம் பெறுவதுடன் நதிகள் இனைப்பு மூல, நீர் ஆதாரங்களும் மேம்படும்.
நன்றி: இண்டியாடுடே