சென்னை:
சஞ்சீவ் பானர்ஜியை மாற்றும் முடிவைக் கைவிடக் கோரி உச்ச நீதிமன்ற கொலீஜியத்திற்கு கடிதம் எழுதப்பட்டுள்ளது.

இந்த கடிதத்தில், உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சய் பானர்ஜியை இடம் மாற்றம் செய்யும் முடிவைப் பரிசீலனை செய்ய வேண்டும். மேலும் மேகாலயா போன்ற சிறிய மாநில உயர்நீதிமன்றங்களில் சஞ்சீவ் பானர்ஜியின் அனுபவம் முழுமையாகப் பயன்படாது” என்று கூறி, உச்ச நீதிமன்ற கொலீஜியத்திற்கு சென்னை பார் கூட்டமைப்பு 33 மூத்த வழக்கறிஞர்கள் கையெழுத்துடன் கடிதம் எழுதி அனுப்பியுள்ளனர்.

அதுமட்டுமல்லாமல் தலைமை நீதிபதி இடமாற்றத்தை மறு பரிசீலனை செய்ய வலியுறுத்தி, உயர்நீதிமன்ற நுழைவாயிலில் நாளை வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம் நடத்த முடிவு செய்துள்ளனர்.
Patrikai.com official YouTube Channel