சென்னை: தமிழகத்திலல் நேற்று புதிதாக 2608 பேருக்கு தொற்று உறுதியான நிலையில், தமிழகத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கபட்டோர் மொத்த எண்ணிக்கை 7,22,011 ஆக உயர்ந்துள்ளது. அதிகபட்சமாக சென்னையில், நேற்று 723 பேர் பாதிக்கப்பட்டுள்னனர்.

சென்னையில் நேற்று ஒரே நாளில்  மட்டும் 723 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் மொத்த பாதிப்பு 1,99,173 ஆக உயர்ந்துள்ளது. அதுபோல நேற்று மட்டும் 13 பேர் உயிரிழந்ததால், இதுவரை பலியானோர் எண்ணிக்கை 3639 ஆக உயர்ந்துள்ளது.

நேற்று ஒரே நாளில் 1047 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். இதனால், இதுவரை குணமடைந்தோர் மொத்த எண்ணிக்கை 1,88,280 ஆக உயர்ந்துள்ளது. தற்போதைய நிலையில், 7254 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

சென்னை உள்ள 15 மண்டலங்களில்  மண்டல வாரியாக கொரோனா சிகிச்சை பெறுவோர் விவரம்
கோடம்பாக்கம் – 488 பேர்
அண்ணா நகர் – 557 பேர்
தேனாம்பேட்டை – 484 பேர்
தண்டையார்பேட்டை – 264 பேர்
ராயபுரம் – 369 பேர்
அடையாறு- 433 பேர்
திரு.வி.க. நகர்- 516 பேர்
வளசரவாக்கம்- 257 பேர்
அம்பத்தூர்- 359 பேர்
திருவொற்றியூர்- 128 பேர்
மாதவரம்- 168 பேர்
ஆலந்தூர்- 193 பேர்
பெருங்குடி- 235 பேர்
சோழிங்கநல்லூர்- 102 பேர்
மணலியில் 121 பேரும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.