சென்னை:
கிண்டி அண்ணா பல்கலைக்கழகத்தில் 300 படுக்கைகள் கொண்ட வார்டுகள் அமைக்கப்பட்டு வருவதாக சென்னை மாநகராட்சி ஆணையாளர் பிரகாஷ் தெரிவித்து உள்ளர். மேலும், நாள் ஒன்றுக்கு 10ஆயிரம் பேருக்கு கொரோனா சோதனை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தெரிவித்து உள்ளார்.
சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் சென்னை கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழகத்தின் அறிவியல் துறை கட்டிடம் கொரோனா சிகிச்சை மையமாக மாற்றப்படுவது குறித்து ஆய்வு செய்தார்.
அதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசியவர், அண்ணா பல்கலை., அறிவியல் துறை கட்டிடத்தில் 300 படுக்கைகள் அமைக்கப்படுகின்றன.
கொரோனா பரவலை தடுக்க குடிசை பகுதிகளில் தொண்டு நிறுவனங்களுடன் இணைந்து கொரோன விழிப்புணர்வு நிகழ்ச்சி மேற்கொள்ளப்படுகிறது. சென்னையில் மட்டும் ஒரு நாளைக்கு 10,000 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கொரோனா பரிசோதனையில் யாரும் விடுபட்டுவிட வாய்ப்பு இல்லை.
சமீப நாட்களில் தென் சென்னை பகுதிகளில் தொற்று குறைவாக பதிவாகியுள்ளது. சென்னை கண்ணகி நகர் குடியிருப்பில் மட்டுமே ஒரு லட்சம் பேர் வசிக்கின்றனர். ஏராளமானோர் வசிக்கும் குடிசைப் பகுதிகளில் அதிக பாதிப்பு ஏற்படவில்லை. முகக்கவசம் அணிவது போன்றவற்றை மக்கள் பின்பற்ற தொடங்கியுள்ளனர். கொரோனா தடுப்பு நடவடிக்கையில் மக்கள் ஒத்துழைப்பு அதிகரித்து உள்ளது, முக கவசம் அணிவது போன்றவற்றை மக்கள் பின்பற்ற தொடங்கி உள்ளனர்.
இவ்வாறு கூறினார்.