3 குழந்தைக்கு தாயான 30 வயது பெண் 12வது படிக்கும் 18 வயது மாணவனை 3வது முறையாக திருமணம் செய்துள்ள சம்பவம் உ.பி.யில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அம்ரோஹா மாவட்டத்தில் உள்ள ஹசன்பூரைச் சேர்ந்தவர் ஷப்னம், வயது 30, பெற்றோரை இழந்த இவருக்கு மீரட் நகரைச் சேர்ந்த ஒருவருடன் முதல் முறையாக திருமணம் நடைபெற்றது.

இந்த திருமணம் விவாகரத்தில் முடிந்ததை அடுத்து, சைதன்வாலி என்ற கிராமத்தைச் சேர்ந்த தவுபீக் என்பவரை இரண்டாவதாக திருமணம் செய்துகொண்டு 3 குழந்தைக்கு தாயானார்.
2011ம் ஆண்டு விபத்து ஒன்றில் கால்களை இழந்த மாற்றுத் திறனாளியான தவுபீக்-குடன் குடும்பம் நடத்தி வந்த ஷப்னத்திற்கு அதை ஊரைச் சேர்ந்த சிவா என்ற சிறுவன் மீது சபலம் ஏற்பட்டுள்ளது.
இதனால் அவரை திருமணம் செய்துகொள்ள துடித்த அந்தப் பெண் தனது இரண்டாவது கணவரிடமிருந்து சமீபத்தில் விவாகரத்து பெற்றார்,
12வது வகுப்பு படித்து வரும் 18 வயது மாணவனான சிவா இந்து மதத்தைச் சேர்ந்தவர் என்பதால் தானும் இந்து மதத்திற்கு மதம் மாறிய ஷப்னம் தனது பெயரை ஷிவானி என்று மாற்றிக்கொண்டார்.
இதையடுத்து உள்ளூர் கோயிலில் மாலை மாற்றி திருமணம் செய்து கொண்டனர்.
இதுகுறித்து காவல்துறையினருக்கு எந்தவித புகாரும் வரவில்லை என்றும் ஷப்னம் கட்டாய மத மாற்றம் செய்யப்பட்டாரா என்பது குறித்து மட்டும் விசாரணை நடத்தப்பட்டதாக காவல்துறை அதிகாரிகள் விளக்கமளித்துள்ளனர்.
மேலும், தங்கள் மகன் விருப்பத்திற்கு தாங்கள் தடையாக இருக்கமாட்டோம் என்று கூறியுள்ள சிவா-வின் பெற்றோர் அவரின் இந்த ‘காதல்’ திருமணத்திற்கு சம்மதம் தெரிவித்துள்ளனர்.