கோவை,

ஞ்சப் புகாரில் கைதான துணைவேந்தர் கணபதியின்  ஜாமீன் மனு மீதான விசாரணையை வரும் 8ந்தேதிக்கு கோவை நீதிமன்றம் ஒத்தி வைத்துள்ளது.

பாரதியார் பல்கலைக்கழக துணைவேந்தர் கணபதி, பேராசிரியர் பணி நியமனத்துக்காக ரூ.30  லஞ்சம் வாங்கும்போது கையும் களவுமாக பிடிபட்டார். அவருக்கு

உதவியாக இருந்த் பேராசிரியர் தர்மராஜும் கைது செய்யப்பட்டார்.

மேலும் கணபதியின் வீடு உள்பட பல இடங்களில் சோதனை நடத்தப்பட்ட ஏராளமான பணம் மற்றும் ஆவனங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.

இந்நிலையில், லஞ்சப் புகாரில் கைதான கோவை பாரதியார் பல்கலைக்கழக துணைவேந்தர் கணபதி சார்பாக கோவை நீதி மன்றத்தில் ஜாமின் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, கணபதிக்கு ஜாமின் கொடுப்பது குறித்து, அரசு பதிலளிக்க கோர்ட்டு உத்தரவிட்டு, வழக்கின் விசாரணையை வரும்  8ம் தேதிக்கு ஒத்தி வைத்துள்ளது.