சென்னை: மருத்துவர்களுக்கு உணவு வழங்கும் திட்டத்தில், நாள் ஒன்றுக்கு 30 லட்சம் ரூபாய் மிச்சம் செய்யப்பட்டு உள்ளதாக தமிழக நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன்  தெரிவித்து உள்ளார்.

அமைச்சர்  மா.சுப்பிரமணியன், சென்னை சைதாப்பேட்டையில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, ஜூன் மாதத்திற்கான தடுப்பு மருந்துகளை மத்திய அரசு அனுப்பினால் மட்டுமே, தமிழகத்தில் இனி தடுப்பூசி செலுத்த முடியும் என்றார். தற்போதைய நிலையில், 36 மாவட்டங்களில் தடுப்பூசி கையிருப்பு இல்லை என்றும், சென்னையில் மட்டும் ஆயிரம் தடுப்பூசிகள் உள்ளது என்று கூறினார்.

மேலும், கடந்த அதிமுக ஆட்சியில் பிரபல உணவகங்களில் இருந்து மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களுக்கு நாளொன்றுக்கு, நபர் ஒருவருக்கு 600 ரூபாய் செலவழித்து உணவு வழங்கப்பட்டது. தற்போது இந்த பணியில் உள்ள  இடைத்தரகர் முறையை ஒழிக்கப்பட்டு விட்டது. அதே உணவு தற்போது, குறைவான விலையில், அதே உணவகங்களில் இருந்து பெற்று தருவதாகவும் ,.  இதன் மூலம் தமிழக அரசுக்கு ஒரு நாளைக்கு 30 லட்சம் ரூபாய் மிச்சமாகி உள்ளது என்று கூறினார்.