டெல்லி:
இந்தியாவில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் 18,552 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 415 பேர் பலியாகியுள்ளனர். இதுவரை பாதிக்கப்பட் டோரின் மொத்த எண்ணிக்கை 5,66,840-ஆக உயர்ந்துள்ளது.
இந்தியாவில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் தீவிரமாகி அனைத்து தரப்பு மக்களையும் சூறையாடி வருகிறது. தொற்று பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. அதை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் எடுத்து வந்தால், கொரோனாவின் தாக்கம் தீவிரமாகிக்கொண்டேதான் செல்கிறது.
கொரோனா பாதிப்பு மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் இன்று காலை வெளியிட்டுள்ள தகவலின்படி, இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 5,48,318-லிருந்து 5,66,840-ஆக உயர்ந்துள்ளது . மேலும் பலியானோரின் எண்ணிக்கை 16,475-லிருந்து 16,890-ஆக உயர்ந்துள்ளது.
அதேசமயம், கொரோனாவில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 3,21,723-லிருந்து 3,34,822-ஆக உயர்ந்துள்ளது.
இவ்வாறு மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.