
டில்லி,
வீட்டில் தனியாக இருந்த இரட்டை குழந்தைகள் வாஷிங் மெஷினுக்குள் விழுந்து பரிதாபமாக உயிரிழந்தது. அந்த அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
3 வயதுடைய இரட்டை குழந்தைகளை தனியாக வீட்டில் விட்டுவிட்டு தாய் கடைக்கு சென்றிருக்கிறார். அப்போது வீட்டில் வாஷிங் மெஷின் இயங்கிக்கொண்டிருந்தது.
தாயை காணாத குழந்தைகள் வீட்டிற்குள் தேடியுள்ளது. ஓடிக்கொண்டிருந்த வாஷிங் மெஷினை பிடித்து ஏற முயற்சித்தபோது தவறுதலாக வாஷிங் மெஷினுக்குள் விழுந்ததாக கூறப்படுகிறது. அவர்களது கூக்குரல் கேட்டு பக்கத்து வீட்டினர் அவர்களை மீட்டனர். பலத்த காயம் அடைந்த அந்த குழந்தைகள் இருவரும் மருத்துவமனை கொண்டு செல்லும் வழியில் பரிதாபமாக உயிரிழந்தனர்.
3 வயதேயான அந்த இரட்டைக் குழந்தைகள் பெயர் நிஷாந்த் மற்றும் நக்சயா.
[youtube-feed feed=1]