டெல்லி: பிரான்சில் இருந்து வாங்கப்படும் ரஃபேல் போர் விமானங்கள் நாளை (மார்ச் 31) இரவு குஜராத்தில் உள்ள விமானப்படை தளம் வந்திறங்குவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. இடையில், ஐக்கிய அரபு எமிரேட்ஸில் தரையிறங்கி எரிப்பொருள் நிரப்பும் என்றும் கூறப்பட்டுள்ளது.
இந்தியா பிரான்சு இடையே கடந்த 2016 ஆம் ஆண்டு போடப்பபட்ட ஒப்பந்தம்படி 36 ரஃபேல் வகை போர் விமானங்கள் வாங்கப்படுகிறது. பிரான்ஸ் நாட்டின் டசால்ட் நிறுவனத்துடன் ரூ.59 ஆயிரம் கோடிக்கு 36 ரஃபேல் போர் விமானங்களை வாங்க, மத்திய அரசு ஒப்பந்தம் செய்தது அதன்படி, முதல்கட்டமாக ஜூலை மாதம் 29 ஆம் தேதி 5 ரஃபேல் விமானங்கள் முதல் கட்டமாக இந்தியா வந்தடைந்தது. தொடர்ந்து 2 மற்றும் 3 வது கட்டமாக சில விமானங்கள் இந்தியா வந்தடைந்தது. இந்த நிலையில், தற்போது 4வது கட்டமாக 3 ரஃபேல் போர் விமானங்கள் நாளை இந்தியா வந்தடைகிறது.
இந்த 3 ரஃபேல் போர் விமானங்களும் நாளை (மார்ச் 31 ஆம் தேதி) காலை 7 மணிக்கு போர்டியாக்ஸில் உள்ள மெரிக்னாக் விமான நிலையத்திலிருந்து புறப்பட்டு இரவு 7 மணியளவில் குஜராத்தில் தரையிறங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இடையில், முக்கிய நட்பு நாடான ஐக்கிய அரபு எமிரேட்ஸ் (யுஏஇ) விமானப்படையின் ஏர்பஸ் 330 மல்டி-ரோல் டிரான்ஸ்போர்ட் டேங்கர்கள் ஓமான் வளைகுடாவில் நடுவானில், ரஃபேல் விமானங்களக்கு எரிபொருள் நிரப்புகின்றன.
இந்தியா வந்தடையும் ரஃபேல் விமானங்கள் அம்பாலாவில் உள்ள கோல்டன் அம்பு விமானப்படை அணியில் சேருவார்கள் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதுவரை 11 ரஃபேர் போர் விமானங்கள் இந்தியா வந்துள்ள நிலையில், நாளை வரும் 3 விமானங்களையும் சேர்த்து, இதுவரை 14 ரஃபேர் போர் விமானங்கள் இந்தியாவுக்கு வந்துள்ளன.,
இதுகுறித்து மத்தியஅரசு வெளியிட்டுள்ள தகவலின்படி, 2021 டெலிவரி கால அட்டவணையின்படி இந்திய விமானப்படை (ஐ.ஏ.எஃப்) தனது இரண்டு படைப்பிரிவுகளை ரஃபேல் விமானங்களை பெறும் என்றும், ஆத்மனிர்பர் பாரத் பணியின் கீழ் இந்தியாவில் பிரெஞ்சு சஃப்ரான் இராணுவ விமான இயந்திரங்களின் கூட்டு வளர்ச்சியில் மோடி அரசு அக்கறை கொண்டு இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.