டில்லி
டில்லியில் ஒரு இஸ்லாமிய மத போதகர் ஜெய்ஸ்ரீராம் என கோஷமிட மற்த்ததற்காக 3 பேர் தாக்கி உள்ளனர்.
டில்லி நகரில் ரோகிணி செக்டர் பகுதியில் ஒரு மதரசா அமைந்துள்ளது. அந்த மதரசாவில் பயிற்சியாளராக இஸ்லாமிய மத போதகரான மவுலானா மொமின் என்பவர் பணி புரிந்து வந்தார். இவர் நேற்று மாலை அந்த பகுதியில் நடை பயிற்சி செய்துக் கொண்டிருந்தார். அப்போது அங்கு ஒரு கார் வந்துள்ளது. காரில் வந்த மூவரும் மவுலானாவிடம் செ ன்று கை குலுக்கி உள்ளனர்.
அந்த மூவரும் அவரிடம் நலமாக உள்ளீர்களா என விசாரித்துள்ளனர். அதற்கு மவுலானா தாம் அல்லாவின் கருணையால் (இன்ஷா அல்லா) நலமுடன் இருப்பதாக தெரிவித்துள்ளார். இந்த வார்த்தை அம்மூவருக்கும் கோபத்தை ஏற்படுத்தி உள்ளது. அவர்கள் மவுலானாவை ஜெய்ஸ்ரீராம் என கோஷமிடச் சொல்லி உள்ளனார்.
மவுலானா இதற்கு மறுத்துள்ளார். இதனால் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. ஒரு கட்டத்தில் எல்லை மீறி காரில் வந்த மூவரும் இணைந்து மவுலானாவை கடுமையாக தக்கி தூக்கி வீசி உள்ளனர். இதனால் மவுலானா மிகவும் காயமுற்று மயக்கமடைந்துள்ளனர். அருகில் உள்ளவர்கள் மவுலானாவை மீட்டு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். அங்கு அவர் சிகிச்சை பெற்று வருகிறார்.
மவுலானா அளித்த புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்த காவலர்கள் தாக்குதல் நடத்திய மூவரையும் தேடி வருகின்றனர். அந்த பகுதியில் கண்காணிப்பு காமிரா பொருத்தப்பட்டுள்ளதால் அந்த பதிவுகளை காவல்துறையினர் ஆராய்ந்து வருகின்றனர். தாக்குதல் நடத்திய மூவரும் விரைவில் கைது செய்யப்படுவார்கள் என காவல் நிலைய அதிகாரி தெரிவித்துள்ளார்