மங்கிரோல், குஜராத்
மத்திய அமைச்சர் ஸ்மிரிதி இரானியின் தொகுதி மேம்பாட்டு திட்டத்தின் கீழ் பணி புரிந்த மூன்று அரசு அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
மக்களவை உறுப்பினர்களுக்கு அவர்கள் பதவிக் காலத்தில் தொகுதி மேம்பாட்டு பணிகளுகாக அளிக்கப்படும் தொகையின் கீழ் பல நல திட்டங்கள் நிறைவேற்றப் படுகின்றன. இவை அனைத்தும் பொதுவாக அந்தந்த மாநில அரசு அல்லது மத்திய அரசு அதிகாரிகள் மூலம் நிறைவேற்றப்படுகின்ரன. அவ்வகையில் ஸ்மிரிதி இரானி குஜராத் மாநிலம் ஆனந்த் மாவட்டத்தில் உள்ள மங்கிரோல் என்னும் சிற்றூருக்கு நலப்பணிகள் செய்ய திட்டமிட்டர்.
இது குறித்து கடந்த 2017 ஆம் ஆண்டு குஜராத் மாநில காங்கிரஸ் ஒரு பொது நல வழக்கு மனுவை குஜராத் உயர்நீதிமன்றத்தில் பதிவு செய்தது. அந்த மனுவில் ”இந்த தொகுதி மேம்பாட்டு திட்டங்களில் பல ஊழல்கள் நடந்துள்ளன. இந்த திட்டங்களை நிறைவேற்ற அவர் சாரதா மஜ்தூர் சகாகாரி மண்ட்லி என்னும் தன்னார்வு தொண்டு நிறுவனத்தை அரசு மூலம் ஸ்மிரிதி தேர்வு செய்தார்.
இந்த திட்டங்களின் விதி முறைப்படி ரூ. 50 லட்சத்துக்கு உட்பட்ட தொகைக்கான ஒப்பந்தம் மட்டுமே அளிக்க வேண்டும். ஆனால் இந்த நிறுவனத்துக்கு ரு.1.23 கோடி மதிப்பிலான ஒப்பந்தங்கள் வழங்கப்பட்டுள்ளன. அது மட்டுமின்றி இந்த பணிகள் குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் முடிக்கப்படவில்லை.
இரண்டு வருடமாகியும் இந்த பணிகள் முடிவடையாததால் கணக்கு தணிக்கை அலுவலகம் இந்த திட்டத்தை கடுமையாக விமர்சித்துள்ளது.” என தெரிவிக்கபட்டுள்ளது.
இந்த மனுவின் மீதான விசாரணை தற்போது நிலுவையில் உள்ளது. அப்போது அதிகமாக செலவழிக்கப்பட்ட தொகையை அந்த நிறுவனத்திடம் இருந்து திரும்ப பெற வேண்டும் என நீதிமன்றம் கூறி இருந்தது.
நேற்று இந்த வழக்கு விசாரணையின் போது குஜராத் அரசு இந்த திட்டத்தின் கீழ் அதிகமாக நிதி அளித்தமைக்காக மூன்று அரசு அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது. அத்துடன் இந்த பணத்தை திரும்ப வாங்க முயற்சி எடுத்து வருவதாக தெரிவித்துள்ளது.
இதற்கு கண்டனம் தெரிவித்த உயர்நீதிமன்றம் அந்த நிறுவனத்தின் சொத்துகளை ஜப்தி செய்யாததற்கு கண்டனம் தெரிவித்துள்ளது.