திருவனந்தபுரம்: கொரோனா இருப்பதை மறைத்து கேரளா வந்த 3 வெளிநாடு வாழ் இந்தியர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
மே 16 அன்று அபுதாபியில் இருந்து திருவனந்தபுரத்தில் தரையிறங்கிய 3 கொரோனா நோயாளிகள் மீது கொல்லம் போலீசார் வழக்குகள் பதிவு செய்துள்ளனர். அவர்களின் உடல்நிலை பற்றி அதிகாரிகள் கவனிக்க தவறியதால் இந்த பிரச்சினை எழுந்திருக்கிறது.
தங்களுக்கு இந்த பாதிப்பு இருப்பதை அறிந்திருந்தாலும், 3 பேரும் திருவனந்தபுரம் வந்தனர். அவர்களின் உடல்நிலையை பற்றி காதார அதிகாரிகளிடம் எந்த தகவலும் சொல்லவில்லை என்று முதலமைச்சர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.
கொல்லம் மாவட்ட மருத்துவ அலுவலக சுகாதார அதிகாரி ஒருவர் கூறியதாவது: வேனில் அவர்கள் உரையாடல்களை சுகாதார அதிகாரிகள் கேள்விப்பட்டதைத் தொடர்ந்து அவர்கள் மூவரும் பரிசோதிக்கப்பட்டனர். அவர்களது உரையாடல்களில் அவர்கள் கோவிட் -19 இருப்பது தெரியவந்தது.
அவர்கள் அபுதாபியில் இருந்து விமானத்தில் ஏறி திருவனந்தபுரத்தில் தரையிறங்கினர். பெரும்பாலான நோயாளிகள் அறிகுறியற்றவர்கள் என்பதால் அவர்கள் கவனிக்கப்படாமல் இருக்கலாம்.
பயணிகளை தங்கள் தனிமைப்படுத்தப்பட்ட மையங்களுக்கு அழைத்துச் சென்ற பேருந்தில் கூட அவர்கள் ஏறியிருந்தனர், பேருந்தில் தான் அவர்கள் உரையாடலின் காரணமாக சந்தேகத்திற்கிடமான நோயாளிகளாக அடையாளம் காணப்பட்டனர் என்றார்.