ஈரோடு: அரசு பள்ளி மாணவ-மாணவிகளுக்கு கூடுதலாக 3 செட் சீருடைகள் வழங்கப்படும் என தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் அறிவித்து உள்ளார்.
ஈரோடு அருகே உள்ள கொங்கர்பாளையம் மற்றும் அரக்கன்கோட்டை பகுதிகளில் கட்சி அலுவலகத்தை திறந்து வைத்த அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது, அரக்கன்கோட்டை பகுதியில் மேலும் ஒரு மேல்நிலைப்பள்ளி திறக்கப்படும். என்று கூறியவர், மாநிலம் முழுவதும் பள்ளிக்குழந்தைகளுக்கு வருகிற டிசம்பர் மாத இறுதிக்குள் ‘ஷூ’ வழங்கப்படும் என்றும், ஏற்கனவே ஒரு சீருடை வழங்கப்பட்டு உள்ள நிலையில் விரைவில் கூடுதலாக 3 சீருடைகள் வழங்கப்படும் என்றார்.
மேலும், இந்த பகுதியில் படித்த 3 ஆயிரம் இளைஞர்களுக்கு தனியார் தொழில் நிறுவனங்கள் மூலம் வேலைவாய்ப்பு முகாம் நடத்தி வேலைவாய்ப்பு ஏற்படுத்தி தர உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
Patrikai.com official YouTube Channel