தமிழ்நாட்டில் மேலும் 3 சூப்பர் பாஸ்ட் ரயில்கள்..
தெற்கு ரயில்வே, தமிழக பயணிகள் பயன்பெறும் வகையில் தற்போது 5 சிறப்பு ரயில்களை இயக்கி வருகிறது.
இது தவிர, தமிழகத்துக்குள் மேலும் 3 சூப்பர் பாஸ்ட் சிறப்பு ரயில்களை இயக்க ,ரயில்வே வாரியத்திடம், தெற்கு ரயில்வே அனுமதி கோரியுள்ளது.
திருச்சி- செங்கல்பட்டு( அரியலூர், விழுப்புரம், மேல்மருவத்தூர் மார்க்கம்),அரக்கோணம்- கோவை ( காட்பாடி, ஜோலார்பேட்டை, சேலம்,ஈரோடு மார்க்கம்) ஆகிய இரண்டு ரயில்களோடு மாயவரம் மெயின் பாதை வழியாக திருச்சி- செங்கல்பட்டு இடையே இன்னொரு ரயிலையும் இயக்க திட்டம்.
ரயில்வே வாரியம் ‘பச்சைக்கொடி’ காட்டுவதற்காக, இந்த மூன்று ரயில்களும் காத்திருக்கின்றன.
‘’ இந்த மூன்று ரயில்களுக்கும் விரைவில் அனுமதி கிடைத்து விடும்.’’ என்கிறார், தெற்கு ரயில்வே மூத்த அலுவலர் ஒருவர்