சென்னை

ன்று தமிழகத்தில் மேலும் 3 புதிய சுங்கச்சாவடிகள் திறக்கப்பட்டுள்ளன.

தமிழகத்தின் தேசிய நெடுஞ்சாலையில், தேசிய நெடுஞ்சாலை ஆணையம் சுமார் 70க்கும் மேற்பட்ட சுங்கச்சாவடிகளை அமைத்து கட்டணங்களை வசூலித்து வருகிறது.  இங்கு ஆண்டுக்கு இருமுறை கட்டணம் உயர்த்தப்பட்டு வருகிறது. அதாவது பாதி சுங்கச்சாவடிகளில் முதல் 6 மாதத்திலும், மீதியுள்ள சுங்கச்சாவடிகளில் அடுத்த 6 மாதத்திலும் கட்டணம் உயர்த்தப்படுகின்றன.

தமிழகத்தில் உள்ள காலாவதியான சுங்கச்சாவடிகளைஅகற்ற வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டது. ஆனால், தமகத்தில் மேலும் 3 இடங்களில் புதிதாக சுங்கச்சாவடிகள் திறக்கப்பட்டுள்ளன. அதற்கான கட்டண வீதமும் அறிவிக்கப்பட்டுள்ளது.

அதாவது விழுப்புரம் மாவட்டம் நங்கிலி கொண்டான், கிருஷ்ணகிரி மாவட்டம் நாகம்பட்டி மற்றும் திருவண்ணாமலை மாவட்டம் கரிய மங்கலம் ஆகிய 3 இடங்களில் சுங்கச்சாவடிகளுக்கான கட்டண வீதங்களை தேசிய நெடுஞ்சாலை ஆணையம் அறிவித்துள்ளது.

விழுப்புரம் நங்கிளிகொண்டான் சுங்கச்சாவடியில் ஒரு முறை சென்றுவர ரூ.60 முதல் 400 வரை கட்டணம் வசூலிக்கப்படும், ஒரே நாளில் சென்று திரும்பி வருவதற்கான கட்டணம் ரூ.95 முதல் ரூ.600 வரை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது எனவும், கரியமங்கலம் சுங்கச்சாவடியில் ஒருமுறை சென்று வர ரூ.55 முதல் ரூ.370 வரை சுங்கக்கட்டணம் வசூலிக்கப்படும், ஒரே நாளில் சென்று திரும்பி வருவதற்கான கட்டணம் ரூ.85 முதல் ரூ.555 வரை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

இந்தியாவிலேயே தமிழகத்தில் தான் அதிகமான சுங்கச்சாவடிகள் (76 சுங்கச்சாவடிகள்) அமைந்துள்ளன. இந்நிலையில், மேலும் 3 சுங்கச்சாவடிகளை அமைப்பதாக தேசிய நெடுஞ்சாலை ஆணையம் அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.