இந்தியாவுக்கு அடுத்தபடியாக இந்துக்கள் அதிகம் வாழும் நாடான நேபாளுக்கு காதலர் தினத்தை முன்னிட்டு இந்தியாவில் இருந்து 3 லட்சம் ரோஜாக்கள் ஏற்றுமதி செய்யப்பட உள்ளது.
கடந்த ஆண்டு சுமார் 1 லட்சம் ரோஜாக்கள் ஏற்றுமதி செய்யப்பட்ட நிலையில் தற்போது 3 லட்சத்திற்கும் அதிகமான சிகப்பு ரோஜாக்களுக்கு தேவை ஏற்பட்டிருப்பதாகக் கூறப்படுகிறது.
டெல்லி, பெங்களூரு மற்றும் கொல்கத்தா ஆகிய நகரங்களில் இருந்து ஏற்றுமதி செய்யப்பட உள்ள இந்த சிகப்பு ரோஜாக்களில் 60 சதவீதம் நேபாள தலைநகர் காத்மாண்டுவில் விற்பனை செய்யப்பட உள்ளது.
சாதாரண நாட்களில் நாளொன்றுக்கு சுமார் 8000 முதல் 10000 ரோஜாக்கள் விற்பனை செய்யப்படும் நிலையில் இந்த ஆண்டு காதலர் தினத்தன்று மட்டும் சுமார் 3 கோடி ரூபாய்க்கு ரோஜா மலர் விற்பனையாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.