சென்னை: தமிழகத்திற்கு இன்று மேலும் 3 லட்சத்து 24 ஆயிரம் கோவிஷீல்டு தடுப்பூசிகள் சென்னை வந்தன. புனேவைச் சேர்ந்த சீரம் நிறுவனத்தில் இருந்து அனுப்பி வைக்கப்பட்டுள்ள தடுப்பூசிக,ள  இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானம் மூலம் சென்னை வந்தடைந்தன.தமிழ்நாட்டில் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. தொற்று பாதிப்பு அதிகம் உள்ள இடங்களை கண்டறித்து , கட்டுப்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளன. மேலும் வழிப்பாட்டுத்தலங்களில் மக்கள் கூடவும் தடை விதிக்கப்பட்டு உள்ளது. அதேவேளையில்  தடுப்பூசி செலுத்தும் பணிகளும் அதிகரிக்கப்பட்டு உள்ளது. தடுப்பூசி பற்றாக்குறையை போக்க முதல்வர் அவ்வப்போது மத்தியஅரசுக்கு கடிதம் எழுதி, தடுப்பூசி பெற்று வருகிறார்.

இந்தநிலையில், இன்று (ஆக.7) புனேவில் இருந்து இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானம் மூலம் 27 பார்சல்களில் 3 லட்சத்து 27 ஆயிரம் கோவிஷீல்டு தடுப்பூசிகள் சென்னை வந்தன. சென்னை விமானநிலைய அலுவலர்கள் தடுப்பூசி பாா்சல்களை தமிழ்நாடு அரசு மக்கள் நல்வாழ்வுத்துறை அலுவலர்களிடம் ஒப்படைத்தனா். இந்த தடுப்பூசிகள்அனைத்தும், சென்னை தேனாம்பேட்டையில் உள்ள டிஎம்எஸ் அலுவலகத்தில் உள்ள குளிர்சாதன கிடங்கில் வைக்கப்பட்டுள்ளன. அங்கிருந்து மாவட்டங்களின் தடுப்பூசி தேவைக்கு ஏற்ப பிரித்து அனுப்பப்பட்டு வருகிறது.