ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரில் பாதுகாப்புபடையினர் நடத்திய என்கவுன்டரில் ஜெய்ஷ் இ முகம்மது அமைப்பு தீவிரவாதிகள் 3 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
புல்வாமா மாவட்டத்தில் கன்காங் என்ற பகுதியில் தீவிரவாதகிள் பதுங்கியிருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து அங்கு சென்ற பாதுகாப்பு படையினர் தீவிர தேடுதல் வேட்டையில் இறங்கினர்.
அப்போது தீவிரவாதிகள் மறைவிடத்தை சுற்றி வளைத்தனர். இரு தரப்பிலும் நடந்த துப்பாக்கி சண்டையில், 3 தீவிரரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். அவர்களில் ஒருவர் பாகிஸ்தானில் செயல்பட்டு வரும் ஜெய்ஷ் இ முகமது அமைப்பின் தலைவர் மசூத் அசார் உறவினர் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
சுட்டுக்கொல்லப்பட்ட 3 தீவிரவாதிகள் தான் சில நாட்களுக்கு முன் புல்வாமாவில் காரில் வெடிகுண்டை நிரப்பி வெடிக்க செய்ய முயன்றதும் அந்த முயற்சியை பாதுகாப்புபடையினர் முறியடித்தாகவும் கூறப்படுகிறது.