சென்னை: தமிழக முதல்வராக ஸ்டாலின் பதவி ஏற்றதுமுதல் அதிகாரிகள் மாற்றம் நடைபெற்று வருகிறது.
தமிழக தலைமைச்செயலாளர் உள்பட சில ஐஏஎஸ் அதிகாரிகள் மாற்றப்பட்ட நிலையில், தற்போது ஐபிஎஸ் அதிகாரிகளும் மாற்றப்பட்டு உள்ளனர்.
சென்னை மாநகர போலீஸ் கமிஷனராக இருந்த மகேஷ்குமார் அகர்வால் மாற்றப்பட்டு, அவருக்கு பதிலராக சங்கர் ஜிவால் நியமனம் செய்யப்பட்டு உள்ளார்.
சட்டம் ஒழுங்கு கூடுதல் டிஜிபியாக தாமரைக்கண்ணன் நியமிக்கப்பட்டு உள்ளார்.
நுண்ணறிவு பிரிவு ஏடிஜிபி-யாக டேவிட்சன் தேவாசிர்வாதம் நியமிக்கப்பட்டு உள்ளார்.
இதற்கான உத்தரவை தமிழக அரசின் கூடுதல் செயலாளர் பிரபாகர் பிறப்பித்துள்ளார்.