கேரளாவில் 3 மாவட்டங்களில் ஒரு மாதத்திற்கு 144 தடை: இன்று முதல் அமல்

Must read

திருவனந்தபுரம்: கேரளாவில் 3 மாவட்டங்களில் இன்று முதல் ஒரு மாதத்திற்கு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

அம்மாநிலத்தில் எர்ணாகுளம், திருவனந்தபுரம், கோழிக்கோடு ஆகிய மாவட்டங்களில்  24 மணி நேரத்தில் தலா 1000க்கும் மேற்பட்ட கொரோனா தொற்றுகள் கண்டறியப்பட்டன. இதையடுத்து அந்த மாவட்டங்களில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
தடை உத்தரவையடுத்து, 5 பேருக்கு மேல் பொது இடங்களில் கூடக் கூடாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. பேருந்துகள், பொது போக்குவரத்து, கடைகள், வங்கிகள், அரசு அலுவலகங்கள் வழக்கம் போல் இயங்கும். மாணவர்களுக்கான தேர்வுகள் நடக்கும்.
இறுதிச் சடங்குகளில் 20 பேரும், திருமண நிகழ்ச்சிகளில் 50 பேரும் பங்கேற்கலாம். மதம், அரசியல் சார்ந்த நிகழ்ச்சிகளிலும் 20 பேர் வரை கலந்து கொள்ளலாம். ஓட்டல்கள், கடைகள் போன்றவற்றில் 5 பேருக்கு மேல் இருக்க அனுமதி இல்லை. மீறினால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

More articles

Latest article