சென்னை, கொளத்தூர் குடிநீர் வாரிய அலுவலகத்தில் குளோரின் வாயு கசிவு ஏற்பட்டு மூச்சுத்திணறல் காரணமாக ஒப்பந்த ஊழியர்கள் 3 பேர்  உயிரிழந்தனர். இது பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது.
தமிழ்நாட்டில் அவ்வப்போது குடிநீர் மற்றும் கழிநீர் பணியின்போது, விஷவாயு தாக்கி பலர் உயிரிழந்து வருவது தொடர்கதையாகிறது இதை  தடுக்க பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்தாலும், உயிரிப்புகளும் தொடர்ந்துகொண்டே இருக்கின்றன.
இந்த நிலையில்,  கொளத்தூர் குடிநீர் வாரிய அலுவலகத்தில் பணியின்போது ஏற்பட்ட குளோரின் வாயு கசிவால் ஒப்பந்த ஊழியர்கள் மூச்சுத்திணறலுக்கு ஆளாகினர்.  அவர்களுக்கு முதலுதவி சிகிச்சை வழங்கப்பட்ட நிலையில், விஷவாயுவால் பாதிக்கப்பட்டவர்கள் அடுத்தடுத்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
உயிரிழந்தவர்கள்  ஒப்பந்த ஊழியர்கள் என்பதும், அவர்களது பெயர்,   குணசேகரன் (வயது 27), ராஜா (வயது 31), சரவணன் (வயது 31) ஆகியோர் என்பதும் தெரிய வந்துள்ளது.
[youtube-feed feed=1]