3 தொகுதி இடைத்தேர்தல்: 91 வேட்புமனுக்கள் ஏற்பு!

Must read

சென்னை:
மிழகத்தில் நடைபெற இருக்கும் இடைத்தேர்தலில் 91 வேட்பாளர்களின் வேட்பு மனுக்கள் ஏற்றுகொள்ளப்பட்டு உள்ளது.
கடந்த மே மாதம் நடைபெற்ற தமிழக சட்டபேரவை தேர்தலின்போது, அரவக்குறிச்சி, தஞ்சாவூர் தொகுதியில் பண பட்டுவாடா விநியோகம் செய்தது கண்டுபிடிக்கப்பட்டதை தொடர்ந்து தேர்தல் ரத்து செய்யப்பட்டது. அதேபோல் திருப்பரங்குன்றம் வேட்பாளர் மரணம் அடைந்ததால் அந்த தொகுதியில் காலியாக இருந்தது.
காலியாக இருந்த 3 தொகுதிகளுக்கும் தேர்தல் நடத்த தேர்தல் ஆணையம் அறிவிப்பு வெளியிட்டது. இதையடுத்து வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.

வேட்புமனு பரிசீலனை இன்று நடைபெற்றது. இறுதியில் 3 தொகுதிகளுக்கும் சேர்த்து, 91 மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
இது குறித்து ஆணையம் வெளியிட்டுள்ள  அறிக்கையில் கூறியிருப்பதாவது,
தமிழகத்தில் நடைபெற உள்ள அரவக்குறிச்சி, தஞ்சாவூர், திருப்பரங்குன்றம் ஆகிய தொகுதிகளில் வேட்பு மனு தாக்கல் நேற்றுடன் முடிவடைந்தது.
139 பேர் வேட்புமனு தாக்கல் செய்திருந்த நிலையில் 91 வேட்பாளர்களின் மனுக்கள் மட்டும் ஏற்றுக் கொள்ளப்பட்டிருக்கிறது.
மேலும்அரவக்குறிச்சியில் 59 பேர் மனுதாக்கல் செய்திருந்தனர். இதில் 13பேரின் மனுக்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டன.
இவ்வாறு கூறப்பட்டு உள்ளது.

Support patrikai.com

பத்திரிக்கை டாட் காம் இணையதள செய்திகளை அதிகளவு விரும்பி படிப்பதற்கு நன்றி. சிறந்த முறையில் செய்திகளை தொடர்ந்து வழங்க பத்திரிக்கை டாட் காம் குழுவிற்கு உங்கள் நிதிப் பங்களிப்பை வழங்கி ஆதரவளிக்குமாறு கேட்டுக்கொள்கிறோம். தொடர்ந்து பல்வேறு கோணங்களில் செய்திகளை வழங்கவும், பதிவு செய்யப்படாத அரிய செய்திகளை ஆவணப்படுத்தவும் உங்கள் நன்கொடை உதவிகரமாக இருக்கும் என்பதில் எந்த ஒரு ஐயப்பாடும் இல்லை.

More articles

Latest article