உத்தரகாண்ட்: உத்தகாண்ட் மாநிலம் கேதார்நாத்  கோவிலுக்கு சென்ற  ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதில் 7பேர் பலியானதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. அதில், 3 பேர் தமிழ்நாட்டின் சென்னையை சேர்ந்தவர்கள் என்ற தகவல்கள் வெளியாகி உள்ளது.

உத்தராகண்ட் மாநிலத்தில் உள்ள கேதார்நாத் கோவிலுக்கு லட்சக்கணக்கான பக்தர்கள் சென்று வருகின்றனர். இன்று பக்தர்கள் ஒரு கழுவினர், ஹெலிகாப்டர் முலம் கோவிலுக்கு சென்றனர். அந்த ஹெலிகாப்டர் மலைப்பகுதியில் விபத்துக்கு உள்ளானது.  இந்த விபத்தில்,  7 பேர் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டது. அவர்களில்  இருவர் விமானிகள் என்றும்,   தேசிய மற்றும் மாநில பேரிடர் மீட்புக்குழுவினர் மீட்புப் பணியில் ஈடுபட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டது.

இதைத்தொடர்ந்து கேதர்நாத் ஹெலிகாப்டர் விபத்து தொடர்பாக மாநிலஅரசு சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில்,  விபத்தில் உயிரிழந்த 7 பேரின் பெயர்கள் வெளியிடப்பட்டுள்ளது. அதில் 3 பேர் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்துள்ளது.

உயிரிழந்தவர்களில் பிரேம்குமார், கலா, சுஜாதா ஆகியோர் சென்னையைச் சேர்ந்தவர்கள்  பக்தர்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஹெலிகாப்டர் விபத்தில் 7 பேர் பலியான சம்பவத்திற்கு, பிரதமர் மோடி, குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.